இந்த வார ராசிபலன்கள் 22-07-2018 முதல் 28-07-2018 வரை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இந்த வார ராசிபலன்கள்

 • சூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் வாகன யோகம் உண்டாகும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் பத்தாமிடத்தில் இருக்கிறார் சொந்தமாக செய்யும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் எல்லா விஷயங்களிலும் நண்பர்களின் உதவி கிடைக்கும். சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பழங்கலைகளை கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வக் கோயில் வழிபாடுகள் நன்மையைத் தரும். ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் அம்மாவின் உடல் நலத்தில் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் முயற்சிகள் வெற்றி பெறும். 21-07 -2018 அன்று அதிகாலை 04-16 மணி முதல் 24-07-2018 அன்று பகல் 03-28 மணி வரை சந்திராஷ்டமம். எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை. யாருடைய வம்புதும்புக்கும் போக வேண்டாம் வீண் விதண்டாவாதத்தையும் வீண் பிரச்சினையும் தவிர்க்கவும். கோயில் குளத்துக்கு சென்று தான தர்மங்கள் செய்வது மன நிம்மதியைக் கொடுக்கும்.

 • சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் தொழிலுக்காக அடிக்கடி வெளியூருக்கு செல்ல வேண்டியிருக்கும். செவ்வாய் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பதவி உயர்வுடன் இடம் மாற்றம் உண்டாகும். புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் நல்ல தகவல் கிடைக்கும். குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மனதில் கவலை உண்டாகும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் மனதில் பாரம் அதிகரிக்கும். ராகு மூன்றாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறப்புகளுடன் சச்சரவு உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் கவனம் தேவை. 24-07-2018 அன்று பகல் 03-28 மணி முதல் 26-07 -2018 அன்று அதிகாலை 04-12 மணி வரை சந்திராஷ்டமம். எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை. யாருடைய வம்புதும்புக்கும் போக வேண்டாம் வீண் விதண்டாவாதத்தையும் வீண் பிரச்சினையும் தவிர்க்கவும். கோயில் குளத்துக்கு சென்று தான தர்மங்கள் செய்வது மன நிம்மதியைக் கொடுக்கும்.

 • சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும். செவ்வாய் எட்டாமிடத்தில் இருக்கிறார் நிலம் வீடு மூலம் பண வரவு சிறப்பாக இருக்கும். உங்கள் ராசிநாதன் புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பேச்சில் புத்திசாலித்தனம் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளால் மன சந்தோஷம் அதிகரிக்கும். சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் நிம்மதி உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் கூட்டாளிகளுடன் நல்லுறவு நீடிக்கும். ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் தெய்வீக வழிபாடு நன்மையைத் தரும். 26-07 -2018 அன்று அதிகாலை 04-12 மணி முதல் சுமார் இரண்டு நாட்கள் வரை சந்திராஷ்டமம். எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை. யாருடைய வம்புதும்புக்கும் போக வேண்டாம் வீண் விதண்டாவாதத்தையும் வீண் பிரச்சினையும் தவிர்க்கவும். கோயில் குளத்துக்கு சென்று தான தர்மங்கள் செய்வது மன நிம்மதியைக் கொடுக்கும்.

 • சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் தலைமைப் பதவி தேடி வரும். செவ்வாய் ஏழாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாட்களாக விற்க நினைத்திருந்த வீடு விற்கும் காலம் இது. புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மதி நுட்பம் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும்.. சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மருத்துவ செலவுகள் ஏற்படும். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் புத்தியில் தடுமாற்றம் ஏற்படும். கேது உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருக்கிறார் உறவினர்களுடன் பிரச்சினை ஏற்படும்.

 • உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகத்தில் செலவுகள் அதிகரிக்கும். செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் இயந்திரங்களை இயக்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்திற்க்காக செலவுகள் அதிகரிக்கும். குரு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அக்கம்பக்கத்தாரின் உதவி கிடைக்கும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் முகத்தில் பிரகாசம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளின் செயல்கள் மனதில் கவலையைத் தரும். ராகு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் சோம்பல் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளால் தொல்லை உண்டாகும்.

 • சூரியன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும். செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் புதிதாக வீடு வாங்குவீர்கள். உங்கள் ராசிநாதன் புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் நினைப்பவை எல்லாம் நடக்கும். குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பேச்சில் இனிமை அதிகரிக்கும். சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் செலவினங்களைத் தவிர்க்கவும். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் பழைய வாகனங்களை ரிப்பேர் செய்வீர்கள். ராகு பதினொன்றாம் இடத்தில் இருக்கிறார் செயல்கள் சிறப்படையும். கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும்.

 • சூரியன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் அம்மாவிற்கு மருந்து மாத்திரை வாங்க வேண்டியிருக்கும். புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைக் கொடுக்கும். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் குழந்தைகளினால் பெருமை அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனைவிக்கு நகைகள் வாங்கி கொடுப்பீர்கள். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் உறவினர் தொல்லை ஏற்படும். ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் புதிய கிளை துவக்குவீர்கள். கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வீடு கட்டும் யோகம் உண்டாகும்.

 • சூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் உதவி கிடைக்கும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களால் நன்மை உண்டாகும். புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் அலைச்சல்களை தவிர்க்கவும். சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களிலும் சிறப்பு உண்டாகும். சனி இரண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் விதண்டாவாதத்தினை தவிர்க்கவும். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக சொத்தில் வில்லங்கம் ஏற்படும்.. கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் சஞ்சலம் உண்டாகும்.

 • சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் செயல்கள் மனக் கஷ்டத்தைக் கொடுக்கும். செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்கள் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்துவிடுவார்கள். புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் ஊக வணிகங்களில் முதலீடுகள் செய்வதை தவிர்க்கவும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் செல்வச் சேர்க்கை அதிகரிக்கும். சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உழைப்பின் காரணமாக உடலில் அசதி அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் வாகனப் போக்குவரத்தில் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் பேச்சுகளை தவிர்க்கவும்.

 • சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடலில் உஷ்ணம் அதிகரிக்கும். புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனின் உதவி கிடைக்கும். குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் சிறந்த நிலையை அடையும். சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் மனைவியுடன் சச்சரவு ஏற்படும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் ஏக்கம் அதிகரிக்கும்.

 • சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகத்தில் உழைப்பு அதிகரிக்கும். செவ்வாய் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் நிலம் வகைகளில் முதலீடுகள் அதிகரிக்கும். புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுடன் பிரச்சினையை தவிர்க்கவும். குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வத்தின் அருள் கிடைக்கும். சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் கணவன் மனைவிக்கிடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் நினைத்தவாறே எல்லாமே நடக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். கேது உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் திருக்கோயில்களுக்கு பிரயாணம் செல்வீர்கள்.

 • சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். செவ்வாய் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் வீட்டு வாடகை மூலம் வருமானம் ஏற்படும். புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைக் கொடுக்கும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கிறார் எதிர்பாராத நேரத்தில் திடீரென்று பணம் கிடைக்கும். சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கைத் துணையுடன் சச்சரவு ஏற்படும். சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்களில் சிறப்பு உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு அதிகரிக்கும்.

http://www.kathiravan.com/?page_id=1302