பரமேஸ்வரி மகாலிங்கம்

பரமேஸ்வரி மகாலிங்கம்

பிறப்பு : 26 நவம்பர் 1953 - இறப்பு : 5 சனவரி 2016

04_44

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் , சுவிஸ் Frutigen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரமேஸ்வரி மகாலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று ஆனதுவோ அன்னையவள் பிரிந்து?
கண்களில் தாரையாய் நீரது வழிந்தோட நீங்கள்
விண்ணகம் விரைந்து சென்றதேனோ – மண்ணில்
புண்பட்ட நெஞ்சங்களாகி நாம் துடிக்கிறோமம்மா!

பொழிந்த உங்கள் பாசத்தினை எண்ணி
விழியிலே வழிந்தோடும் நீரதைத் துடைக்க
வழிபார்த்து வாசலில் காத்துள்ளோம் – மீதிக்காலமதைக்
கழிக்கும் வகைதெரியாது வாடுகிறோமம்மா!

அன்னமது அளித்து ஆறுதலாய்ப் பேசிய
உன்னத அன்பின் ஊற்றினைப் பிரிந்து
கன்னத்தில் வடியுது கண்ணீர் வெள்ளமாய்!
தன்னந்தனியே எமைத் தவிக்கவிட்டு சென்றீர்களேயம்மா!

சிரிப்பலை கேட்காது சிதையுது நெஞ்சம்
வாரியணைக்க உறவின்றியானதே எமக்குப் பஞ்சம்
காலனவன் காட்டவில்லை எமக்குக் கருணை கொஞ்சம்
கண்ணீர்தானோ எமக்கு இனித்தஞ்சம்!

உங்கள் பிரிவால் வாடும்
மகாலிங்கம்(கணவர்), ஜீவகுமார்(மகன்), சம்பிக்கா(மருமகள்)

தகவல்
குடும்பத்தினர்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit