நடராசா சுகந்தமலர்

நடராசா சுகந்தமலர்

பிறப்பு : யாழ். புங்குடுதீவு - இறப்பு : யாழ். புங்குடுதீவு

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராசா சுகந்தமலர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

“வருடமோ விகீர்த்தியங்கண் மார்கழித்திங்கள்
அருமிருபத்தீராம் நாளில் அமைந்த நற்பூர்வபக்க
மருவு சஷ்டி நாள் தன்னில் மாண்பினாள் சுகந்தமலர்
கருணைகூர் சிவன்தாள் பற்றிக் காய்ந்தனள் நன்னை”

இயற்கை அழைக்கிறது…! இதயம் துடிக்கிறது..!
ஆனாலும் இறைவன் உன்னை அழைக்கிறான்…!
செல்வது எங்கே…? சொல்லிவிடு தாயே…!
அன்பையும் அறிவையும் போதித்தாய் அம்மா!
ஆனாலும் நீ போகும் இடம் எங்கே…!

காலத்தின் மடியில் துயில் கொள்கிறாய்!
கதிரவனின் நிழலாய் ஒளியாகிறாய்!
எம் காவியத்தின் நிழலில் கண் உறங்கு தாயே…!

தாயே உன் முழு முகம் மறைய!
முழு நிலா தோன்றிவிட்டது!
இனிமேல் உருகும் பொழுதிற்கு உறக்கமில்லை!

மனமும் மெழுகும் உருகுது!
பொழுதும் பொன்னும் உன்னைத் தேடுது!
அலைகடலும் ஆகாயமும் உன் நினைவில்
எம் உறவு தாயே நீ போவது எங்கே?

கண் மூடாமலே கனவு ஆகிறாய் அம்மா!
உன்னை இறைவன் அழைத்துக் கொள்ள
இயற்கை அணைத்துக் கொள்ள
இயற்கைக்கு சொந்தமானாயே தாயே!

முழுமதியின் உறவோ நீ! முத்துக்களின் தீவோ நீ!
முழுமதியின் உறவோ நீ! முத்துக்களின் தீவோ நீ!
உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை இறைஞ்சுகின்றோம்!

தகவல்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*