30_106

சிவமீரா பொடிசிங்கம்

சிவமீரா பொடிசிங்கம்

பிறப்பு : 16 யூலை 1988 - இறப்பு : 31 டிசெம்பர் 2014

30_106

யாழ். பருத்தித்துறை குடத்தனை பொற்பதியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Nyborg ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவமீரா பொடிசிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் தேவதையே தங்கப் பேரழகாய்
திங்களின் ஒளிகொண்டு வீட்டில்
மகிழ்வைப் பொங்க வைத்து எமைவிட்டு
எங்கே போனாயம்மா ஏங்கித் தவிக்கின்றோம்!

ஈராண்டு சென்றதம்மா! எம் ஈரவிழிகள் காயவில்லை
நேர்மையான உன் குணமும் நேசமான உன் பேச்சும்
நூறாண்டு சென்றாலும் எம் நினைவு விட்டு அகலுமோ!

சிட்டெனப் பறந்த சுந்தரியே
சீக்கிரமாக ஏன் போனாய்?
உன்கெட்டித்தனங்களால் வியந்து நிற்க
காலக்கிறுக்கன் தவறிழைத்தானோ

உன் பட்டமளிப்புவிழா கொண்டாட நினைக்கையிலே
எமைப் பரிதவிக்க விட்டு போனதேனோ

எத்தனை பிறப்பு எடுத்தாலும்
நீயே எம்மகளாக வரவேண்டும்
எம் வீட்டில் உணவுண்டு உனக்கு
எமனாக வந்தவனுக்கு
எல்லாம் வல்ல இறைவன் நீதி வழங்கட்டும்

எம் மகளே நீ அமைதியாய் தூங்கு
உன் நினைவில் வாடும்
றொபேட் கெனடி குடும்பம்.

தகவல்
குடும்பத்தினர்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit