தனியார் துறையூடாக அதிக முதலீடுகளை பெற எதிர்பார்ப்பு – ரவி கருணாநாயக்க

பிறப்பு : - இறப்பு :

புதிய அரசாங்கம் தனியார் துறையிலேயே அதிகளவான முதலீடுகளை பெற எதிர்பார்த்துள்ளதாக நிதி அமைச்சா் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கம் தனியார் துறையில் முதலீடுகளை ஈர்க்க போதிய முனைப்புகளை மேற்கொள்ளவில்லை.

இந்த நிலைமையை மாற்ற வேண்டும் என நிதியமைச்சர் வெளிநாட்டு செய்தி சேவை ஒன்றிடம் கூறியுள்ளார்.

அதேவேளை, இலங்கையின் மிகப் பெரிய ஏற்றுமதிச் சந்தைகளாக இந்தியா மற்றும் சீனா உள்ளன.

சுற்றுலாத்துறையில் அதிகளவு முதலீடுகளை இந்த நாடுகள் வழங்குவதாகவும்குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையை பொருளாதார ரீதியில் அபிவிருத்தி செய்ய சீனா மற்றும் இந்தியாவிடம் உதவிகளை பயன்படுத்த வேண்டும் என முன்னணி பொருளாதார ஆய்வாளரான சிரான்பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த இரு நாடுகளின் சந்தைகளும் இலங்கைக்கு தேவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit