புலிகளின் முன்னாள் அம்பாறை மாவட்ட தளபதி ராம்; வானில் கடத்தல்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

புனர்வாழ்வு பெற்று விடுதலையாகிய புலிகளின் முன்னாள் அம்பாறை மாவட்ட தளபதி ராம், வானொன்றில் கடத்திச் செல்லப்பட்டதாக அவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

திருக்கோவில் தம்பிலுவில் பகுதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இனந்தெரியாதவர்களினால் வான் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் அம்பாறை மாவட்ட தளபதியாக இருந்து, 2009 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இதன்பின்னர், 2013 ஆம் ஆண்டு விடுதலையாகி திருமணம் செய்த நிலையில், திருக்கோவில் தம்பிலுவில் பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றார்.

இந்த நிலையில், இன்று அவரது மனைவி மட்டக்களப்பிற்கு சென்றதன் பின்னர், தனிமையில் இருந்த அவரை 8.30 அளவில் நீலநிற வான் ஒன்றில் வந்தவர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.

அவரது மனைவி சுதாராணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் இதுதொடர்பாக திருக்கோவில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*