தனியாரிடம் ஒப்படைக்கப்படவுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்! – 15 ஆயிரம் கோடி ரூபா கடன் அரசாங்கத்தின் தலையில்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

srilankan airlines

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் செலுத்த வேண்டியிருக்கும் 15 ஆயிரம் கோடி ரூபாவை அரசு பொறுப்பேற்றுக் கொண்டு அந்நிறுவனத்தின் நிர்வாகத்தை தனியார்துறையிடம் ஒப்படைப்பதற்குத் தீர்மானித்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை தனியார்துறையிடம் ஒப்படைக்க ஏற்கனவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் இந்தப் பெருந்தொகைக் கடனுடன் அந்த நிறுவனத்தைப் பொறுப்பேற்க தனியார்துறையினர் எவரும் முன்வரவில்லை.

எனவே, கடன்பொறுப்பை அரசு ஏற்றுக்கொண்டு அந்நிறுவனத்தைத் தனியாரிடம் ஒப்படைக்க முடிவுசெய்துள்ளதாக அவ்வட்டாரங்கள் தெரிவித்தன. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உட்பட பல நிறுவனங்களுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாவை கடன் தொகையாக வைத்துள்ளது. அத்துடன், புதிய விமானங்களைக் கொள்வனவு செய்வதற்காக மேலும் பாரிய தொகையொன்று கடனாகப் பெறப்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்நிறுவனத்தை அரசு தொடர்ந்தும் நிர்வகிக்க முடியாது என்பதால் செலுத்தவேண்டிய கடன்களைப் பொறுப்பேற்றுக்கொண்டு அதன் நிர்வாகத்தைத் தனியார் துறையிடம் ஒப்படைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit