மன்னாரில் சிறுபோகத்திற்கு 13 வகை நெல்லினங்கள் பரிந்துரை

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

mannar

மன்னாரில் 2016 ஆம் ஆண்டு சிறுபோகத்திற்கு 13 வகை நெல்லினங்கள் விவசாய திணைக்களம் பரிந்துரைத்துள்ளது.கடும் வறட்சி காரணமாக நீர்மட்டம் குறைந்துள்ளதால் 2016 ஆம் ஆண்டுக்கான சிறுபோக செய்கை வீழ்ச்சி கண்டுள்ளது.இதுதொடர்பாக மன்னார் மாவட்டத்தின் 2016 ஆம் ஆண்டிற்கான சிறுபோக நெற்பயிர் செய்கை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் நிறைவு பெற்றுள்ளன.
அதுதொடர்பான விசேட கூட்டம் உயிலங்குளம் வண்ணாமோட்டை விவசாய பயிற்சி நிலையத்தில் மன்னார் மாவட்ட செயலாளர் எம்.வை.எஸ். தேசபிரிய தலைமையில் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில், மன்னார், நானாட்டான், மாந்தை மேற்கு ஆகிய மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமிருந்து விவசாய அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட விவசாயிகள் மற்றும் கால்நடை பண்ணையாளர்கள் கலந்து கொண்டனர்.
தமது தேவைகள் தொடர்பாக கலந்துரையாடியதுடன், 2016 ஆம் ஆண்டிற்கான சிறுபோகம் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டது.சிறுபோகம் செய்கை பண்ணப்படவுள்ள காலத்தில், கால்நடைகள் நெற்பயிர்செய்கையை நாசப்படுத்தாத வண்ணம் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

இம்முறை சிறுபோகம், கடந்த ஆண்டு சிறுபோகத்தை பார்க்கிலும் நெற்பயிர்ச் செய்கையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.கடந்த 2015 ஆம் ஆண்டு 3000 ஏக்கர் நிலப்பரப்பில் செய்கை பண்ணப்பட்ட சிறுபோக நெற்பயிர்ச் செய்கை இவ்வாண்டு 1500 ஏக்கராக வீழ்ச்சி கண்டுள்ளது.கடும் வெப்பம் காரணமாக வறட்சி ஏற்பட்டு, நீர் மட்டம் குறைந்துள்ளமை இதற்கான காரணம் என சுட்டிக்காட்டப்பட்டது.

இதனால், கடந்த ஆண்டு கட்டுக்கரைக் குளத்தின் நீர்மட்டம் 10 அடியாக இருந்த நிலையில், இவ்வாண்டு வறட்சி காரணமாக நீர்மட்டம் 8 தொடக்கம் 7 அடியாக குறைவடைந்துள்ளது.சிறுபோக நெற்பயிர்ச் செய்கையின் விதைப்பு எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் மே மாதம் 21 ஆம் திகதி வரைக்குள் விதைத்து முடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில், இம்முறை சிறுபோக செய்கைக்கென 13 வகையான நெல்லினங்கள் செய்கை பண்ண விவசாய திணைக்களம் பரிந்துரை செய்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit