பெண்ணொருவர் மீது தாக்குதல் நடத்தி பலவந்தமாக தடுத்து வைப்பு! தந்தையும், மகனும் கைது

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பெண்ணொருவர் மீது தாக்குதல் நடத்தியதுடன், அவரைப் பலவந்தமாக தடுத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் தந்தையும், மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று கல்முனை நகரில் நடைபெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்பாவும் மகனுமாக இரண்டு பேர் சேர்ந்து அப்பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணொருவரை கடுமையாக தாக்கி, அவரை பலவந்தமாக தடுத்து வைத்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கல்முனைப் பொலிசார் குறித்த தந்தை, மகன் இருவரையும் கைது செய்துள்ளனர்.

இவர்களில் தந்தை ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் என்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இதேவேளை, தாக்குதலுக்குள்ளான பெண் தற்போது கல்முனை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*