தமிழர்களின் உலக வரலாற்றுக்கு அடையாளமிட்டவர் பிரபாகரன் என சிறிதரன் எம்.பி தெரிவிப்பு.

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கறுப்பினத்தின் வரலாற்றை நெல்சன் மண்டேலாவும், முஸ்லிம்களின் வரலாற்றை யசீர் அரபாத்தும் சொன்னதைப் போன்று, தமிழினத்தின் வரலாற்றை உலகிற்குச் சொன்னவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.இந்துக்கல்லூரியில் இடம்பெற்ற ‘அலை அழித்த தமிழ்’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்படி கருத்துக்களைத் தெரிவித்தார்.

அவர் தனது உரையில் மேலும் குறிப்பிடுகையில் மாவிலாறு மற்றும் சுன்னாகம் போன்ற விடயங்களை எழுத்தாளர்கள் எழுதியதைப் போன்று முள்ளிவாய்க்கால் பற்றியும் எழுதி, வரலாற்றை சரியான பாதையில் இட்டுச்செல்ல வேண்டும் தமிழினத்தின் வரலாற்றை உலகறியச் செய்யவேண்டும்.

நீங்கள் உங்கள் ஆர்வத்தோடும் துடிப்போடும் எழுதுங்கள் இன்னுமின்னும் பல நூல்களை எழுதுங்கள் அப்போதுதான் எமது வரலாற்று உண்மைகள் வெளிவரும். எழுதுவது என்பது மிகவும் கடினமான பணி அன்னை திரேசா தனது பணியைச் செய்வதற்காக கடுமையான கஸ்டங்களை எதிர்கொண்டார் இருந்தபோதும் அவர் தனது பணியை விட்டுவிடவில்லை ஆனாலும் அவர் பிறருக்காக வாழ்ந்து அவர் எதிர்நோக்கிய கஸ்டங்களுக்கான பலனாக உலகமே போன்றுகின்ற அன்னையாக அவரது நாமம் நிலைத்திருக்கின்றது.

ஒரு இனத்தின் விடுதலைக்காக இயேசு பிரான் சிலுவை தூக்கினார். விவேகானந்தர் சொன்னார் சொல் செயல் சிந்தனைகளில் ஒத்த தன்மையுடைய நால்வரால் இந்த உலகத்தையே மாற்றியமைக்க முடியும் என்று. கருத்துக்கள் சொற்கள் சிந்தனைகள் என்பது ஒரு சிலரிடமிருந்தே பிறக்கின்றன. அந்த ஒரு சொல் செயல் சிந்தனை என்பன உங்களிடமிருந்து பிறக்க வேண்டும். கறுப்பினத்தின் வரலாற்றை நெல்சன் மண்டேலாவும், முஸ்லிம்களின் வரலாற்றை யசீர் அரபாத்தும் சொன்னதைப் போன்று, தமிழினத்தின் வரலாற்றை உலகிற்குச் சொன்னவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனேதான்.

இவர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல வரலாறு பிரசவிக்கின்ற மனிதர்கள் வரலாற்றின் அத்திபாரங்கள், அடையாளங்கள். அந்த அடையாளங்களைத்தான் நீங்களும் இன்றைய காலத்திலே உங்கள் கையிலே எடுத்துள்ளீர்கள். அது கடினமான பணி அதனை நீங்கள் செய்யுங்கள் வரலாறு உங்களை திரும்பிப்பார்க்கும் காலம் வரும். தமிழர் வரலாற்றை நீங்கள் எழுதுங்கள் கடலாலும் தரையாலும் சாதனை படைத்த வரலாறு தமிழர்களது வரலாறு அது ஈழத் தமிழர்களது வரலாறு. அந்த வரலாறுகள் மறக்கப்படவோ மறைக்கப்படவோ முடியாதவை. ஏங்களிடம் எத்தனையோ ஓயாத அலைகள் இருக்கின்றன, இதயபூமிகள் இருக்கின்றன, தீச்சுவாலைகள் இருக்கின்றன, ஆகாயக் கடல் வெளிச் சமர்கள் இருக்கின்றன. இதெல்லாம் இந்த மண்ணிலே அறுபதாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் மண்ணிலே சிந்திய குருதிகளையும் தம்மை அர்ப்பணித்த வீரவரலாறுகளையும் அது எடுத்தியம்புகின்றன. எனவே எமது வரலாறு நிலைப்பதற்கான உங்கள் பணியை நீங்கள் தொடருங்கள். வரலாற்றில் நீங்கள் போற்றப்படுவீர்கள் எனத் தெரிவித்தார்.

அந்திவானம் பதிப்பகத்தின் வெளியீடான அலை அழித்த தமிழ் நூல் வெளியீட்டுவிழா நிகழ்வு கடந்த 10 ஆம் திகதி யாழ்.இந்துக் கல்லூரியில் மாலை 4.00 மணிக்கு ஆசிரியர் ந.கணேசமூர்த்திதலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் வரவேற்புரையினை பல்கலைக்கழக மாணவன் கு.விமலன் ஆற்றியதைத் தொடர்ந்து வாழ்த்துரைகளை சின்மய மிஷன் பிரம்மச்சாரி ஜாக்ரத் சைத்தன்யா அவர்களும் கிளிநொச்சி காவேரி கலாமன்ற நிறைவேற்று இயக்குநர் வண.ரி.எஸ்.யோசுவா அவர்களும் வழங்கினார்கள். வெளியீட்டுரையினை பல்கலைக்கழக மாணவன் க.கஜனனும் மதிப்பீட்டுரையினை கம்பன் கழக இளநிலைத் தலைவர் செ.சோபிதனும் ஏற்புரையினை நூலாசிரியரான பா.நீதுஜன் அவர்களும் ஆற்றியிருந்தார்.

தொடர்ந்து இந்நிகழ்வில் விருந்தினர்களாகக் கலந்துகொண்ட கல்விக்காருணியன் கொடைக்கோ லயன் ஈ.எஸ்.பி.நாகரத்தினம் நூலினை வெளியிட்டுவைக்க யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் முதற்பிரதியைப் பெற்றுக்கொண்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*