ட்விட்டர் சண்டை: அஜீத், விஜய் ரசிகர்களிடையே சிக்கி நொந்து நூடில்ஸான மனோபாலா

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ட்விட்டரில் அஜீத், விஜய் ரசிகர்களிடையே சிக்கிய நடிகர் மனோபாலா நொந்து நூடுல்ஸாகிவிட்டார். அஜீத்தும், விஜய்யும் என்ன தான் நாங்கள் நண்பர்கள், நீங்களும் எங்களை போன்று ஒற்றுமையாக இருங்கள் என்று ரசிகர்களை கேட்டுக் கொண்டாலும் அவர்கள் அதை எல்லாம் காது கொடுத்து கேட்பது இல்லை.

ஃபேஸ்புக், ட்விட்டரில் அஜீத், விஜய் ரசிகர்கள் அடிக்கடி மோதிக் கொள்வார்கள். இந்த வாரம் அவர்களிடம் சிக்கியவர் நடிகர் மனோபாலா.

நம்ம தல அஜீத்தை சந்தித்தேன். வாவ்.. அவ்வளவு அடக்கமான நபர், ஜென்டில்மேன். எப்பொழுதும் போன்று இப்பவும் என் குடும்பத்தார் பற்றி நலம் விசாரித்தார்… கிரேட்…என்று மனோபாலா ட்விட்டரில் தெரிவித்தார்.

அவரை சந்தித்ததை ட்விட்டரில் போடச் சொல்லியிருப்பாரே அஜீத் என்று விஜய் ரசிகர்கள் ஆளாளுக்கு மனோபாலாவை கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர்.

இல்ல, இல்ல இது நானா தான் போடுகிறேன் என்று மனோபாலா கூறியும் யாரும் கேட்கவில்லை. அஜீத் உங்களை வலுக்கட்டாயமா போட்டோ எடுத்து அதையும் போடச் சொல்லியிருப்பாரே என்று அவரிடம் விஜய் ரசிகர்கள் கேட்டனர்.

தல எப்படி இருக்கார் என்று அஜீத் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு மனோபாலா கூறுகையில், அவர் நல்லா இருக்கார். கால் ஆபரேஷன் பற்றி கேட்டதற்கு ஷாலு கர்ப்பமாக உள்ளதால் பிறகு பார்க்கலாம் என்றார் என தெரிவித்துள்ளார்.

ரொம்ப நாளாச்சே என்று தல கூறினார். அவருடன் சேர்ந்து நடிக்க விரும்புகிறேன், பார்க்கலாம் என்று மனோபாலா தெரிவிக்க அதற்கு விஜய் ரசிகர் ஒருவரோ, அஜீத் என்ன உங்களுக்கு தாத்தாவா நடிக்கிறாரா என்று கேட்டார்.

அஜீத், விஜய் ரசிகர்கள் இப்படி சண்டை போடுவதை பார்த்த மனோபாலா, ஹலோ நண்பர்களே… உங்கள் ஆட்டத்திற்கு நான் வரலே… என் தம்பி விஜய்… தயவு செய்து இதை பிரச்சனை ஆக்காதீங்க என்று கெஞ்சியுள்ளார்.

 

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*