அகவை பத்தில் கதிரவன் (வாழ்த்துச் செய்திகள்,காணொளி இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நேயர்களாகிய உங்களின் பேராதரவோடு கதிரவன் இணையம் அகவை பத்தில் கால் பதிக்கிறது. ஒரு இணைய ஊடகத்தைப் பொறுத்தவரை இது ஒரு சாதனையாகவே கொள்ளப்படக் கூடியது. உலகளாவிய அடிப்படையில் அதிக இணையத் தளங்களைக் கொண்ட மொழியாக செம்மொழியான தமிழ் கருதப் படுகின்றது. தினம் தினம் ஒரு புது வரவு நிகழ்ந்து கொண்டிருக்கும் இணைய உலகில், தொடங்கப்பட்ட இணையத் தளங்கள் அன்றாடம் காணமற் போய்க் கொண்டும் இருக்கின்றன. அதனோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் கதிரவன் ஒருபடி மேலே நிற்கிறது எனலாம்.

ஆரம்பம் முதலாகவே தமிழ்த் தேசியம் என்ற ஒற்றைக் கொள்கையோடு நடைபோடுகிறது எமது இணையம். எமது வாசகர்கள், நேயர்கள் பல தரப்பட்டவர்களாக இருந்தாலும், பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய விடயங்களை நாம் அளித்தாலும் எமது அடிப்படைக் கொள்கையில் இருந்து நாம் தடம் மாறவில்லை என்பதைப் பெருமையோடு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

தொழில்நுட்ப வளர்ச்சி இன்று அதீத வேகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. அதனோடு போட்டி போட்டுக் கொண்டு நாமும் எம்மை வளர்த்துக் கொண்டே வருகின்றோம். அதேவேளை இரசனையிலும் பாரிய மாறுதல்கள் இடம்பெற்று வருகின்றது. இதற்கும் நாம் ஈடு கொடுக்க வேண்டி இருக்கின்றது.

மற்றும் எம்முடன் இணைந்து  இத்தனை வருடங்கள் விளம்பரங்களை பிரசுரித்து ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து விளம்பரதாரர்கள் மற்றும் எங்கள் முன்னேற்றத்திற்கு பங்கு வகித்த அனைத்து கதிரவன் வாசகர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறோம்.  

ஒரு ஊடகத்தின் வளர்ச்சியை அளவிட சரியான முறை எதுவெனப் புரியவில்லை. எனினும், அன்றாடம் அதிகரிக்கும் எமது நேயர்களின் எண்ணிக்கையும், அகவை பத்தில் கால்பதிக்கும் இவ்வேளையில் அறிஞர் பெருமக்கள் எமக்கு வழங்கிய ஆசிச் செய்திகளில் தெரிவித்த விடயங்களும் நாம் சரியான வளர்ச்சிப் பாதையில் செல்கின்றோம் என்ற நம்பிக்கையைத் தருகின்றது. இந்த நம்பிக்கை உருவாக்கும் மனவலிமையோடு நாம் தொடர்ந்தும் சரியான திசையில் பயணிப்போம். எம்மோடு தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

வாழ்த்துக் கவிதைகள் 

கணணி வழி உறவிலே கருக்கொண்ட கதிரவன்” -சிவமேனகை சுவிற்சலாந்து 

அவனிக்கு ஒளியான ஆதவன்!” – கங்கைமகன் – சுவிஸ்

அகவை பத்தில் அழகிய கதிரவன் இணையம்” – சிவதர்சினி ராகவன் சுவிஸ் 

“கதிரவனே வாழீ!” – கவிஞர் மதி சுவிஸ் 

கதிரவனின் 9 ஆவது அகவை மீள்பார்வை!

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*