இலங்­கையில் முன்னாள் போரா­ளிகள் கண்­கா­ணிக்­கப்­பட்டு வருகின்றனர்; யுஜி இவ­சவா

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இலங்­கையில் முன்னாள் போரா­ளிகள் கண்­கா­ணிக்­கப்­பட்டு வரு­வ­தாக ஐக்­கிய நாடுகள் மனித உரிமை குழுவின் உறுப்­பினர் யுஜி இவ­சவா தெரி­வித்­துள்ளார்.

இலங்கை தொடர்­பான மீளாய்வுக்குழு கூட்டம் நேற்று ஆரம்­ப­மா­னது. இன்­றைய தினமும் அக்­கூட்டம் தொட­ர­வுள்ள நிலை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து வெளியி­டு­கையில்,

தனிப்­பட்ட தொடர்­பாடல் பொறி­மு­றைமை குறித்த நட­வ­டிக்­கை­க­ளுக்கு பின்­ன­ரான பின்­னூட்­டல்கள் தொடர்பில் இலங்கை அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கைகள் திருப்தி அளிக்கும் வகையில் அமை­ய­வில்லை தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் மற்றும் இர­க­சிய உரிமை ஆகி­யன தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என இலங்கை அர­சாங்கம் அளித்த வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ள­னவா? இலங்கை அர­சாங்­க­மா­னது தேசிய செயற்­றிட்­ட­மொன்றின் மூலம் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என உறு­தி­ய­ளித்­துள்ள நிலையில் அது தொடர்­பி­லான விப­ரங்­களை பகி­ரங்­க­மாக வெளியி­ட­வேண்டும்

முன்னாள் போரா­ளி­க­ளுக்கு புனர்­வாழ்வு அளிக்­கப்­பட்­டுள்­ள­தாக அர­சாங்கம் அறி­வித்த போதிலும், முன்னாள் போரா­ளிகள் தொடர்ச்­சி­யாக கண்­கா­ணிக்­கப்­ப­டு­வ­துடன், அடக்­கு­மு­றைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றனர். இலங்கை அர­சாங்­க­மா­னது சனல்-–4 தொலைக்­காட்சி ஆவ­ணப்­ப­டத்தில் கூறப்­பட்ட விட­யங்­க­ளுக்கு பதி­ல­ளிக்க வேண்­டி­யுள்­ள­தோடு பொறுப்­புக்­கூ­ற­வேண்­டியது அவ­சி­ய­மாகும்.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை குழுவின் உறுப்­பினர் அஞ்சா செய்­பிரட் போஹர் தன்­னு­டைய அறிக்­கையில் காணாமல் போனோர் தொடர்­பான பிரச்­சி­னைகள் தொடர்ந்து கொண்­டி­ருப்­ப­தாக கூறி­யுள்ளார். அத்­துடன் வெள்ளைவான் கடத்­தல்கள் தொடர்­பாக இரா­ணுவம் பொலிஸ் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தொடர்­பு­பட்­டுள்­ளமை தொடர்­பாக அர­சாங்கம் கவனம் செலுத்தி நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டி­யுள்­ள­தோடு அவை தொடர்பில் வினாக்களும் உள்ளனவென குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகளுக்கான வதிவிடப்பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க மனித cஉரிமைகளுக்கு இலங்கை உரிய மதிப்பளிப்பதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*