விமானத் தாக்குதல் மூலம் கொபானி நகர் ISIS வசம் வீழ்வதைத் தடுக்க முடியாது!:அமெரிக்கா

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சிரியா மீதான விமானத் தாக்குதல் முக்கிய நகரமான கொபானி ISIS வசம் வீழ்வதைத் தடுக்கப் போவதில்லை என பென்டகன் பேச்சாளர் ஜோன் கிர்பி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

கொபானி நோக்கி ISIS முன்னேறுவதைத் தடுக்க எம்மால் இயன்ற வான் தாக்குதலை செய்வோம் என்றும் எனினும் விமானத் தாக்குதல் மற்றும் இவர்களை முற்றாகத் தடுக்க போதாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் விமானத் தாக்குதல்களின் முக்கிய இலக்கு ISIS தலைமைத்துவம் மற்றும் உட்கட்டமைப்பைக் குறிவைத்தே என்றும் நகரங்களைக் காப்பாற்றுவதற்கல்ல என்றும் அமெரிக்க அதிகாரிகள் அறிவித்துள்ளனர். சிரியாவில் விமானத் தாக்குதலில் இதுவரை 45 ISIS போராளிகள் பலியாகி இருப்பதை மனித உரிமைகள் கண்காணிப்பகம் உறுதிப் படுத்தியுள்ளது. இந்நிலையில் ISIS இனால் வெடிமருந்து நிரப்பப் பட்ட டிரக் வண்டி ஒன்று மத்திய கொபானியில் இலக்கை அடைய முன்னரே மோதி வெடிப்பு நிகழ்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டைம்.காம் இல் வெளியான தகவல் படி, கொபானி நகரை ISIS முற்றாகக் கைப்பற்றி விட்டால் துருக்கி எல்லையோரமாக பிராந்திய முக்கியத்துவம் மிக்க மிகப் பெரிய நிலப்பரப்பு இவர்கள் வசமாவதுடன் இதன் மூலம் தமது அமைப்பின் நிலைகளை அலெப்போ இலிருந்து மேற்குப் பகுதிக்கும் ரக்காவில் இருந்து கிழக்கு பகுதிக்கும் தொடர்பு படுத்த முடியும் என்பதும் முக்கியமானது. இதன் மூலம் இவர்களது பலம் பல மடங்கு அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கப் பட்டுள்ளது. இதேவேளை சிரியாவிலும் ஈராக்கிலும் ISIS அமைப்புக்கு $1 மில்லியன் டாலர் வரை தினசரி பண உதவி வந்து சேர்வதாகக் கூறப்படுகின்றது. இவை வந்து சேரும் வழிகளைக் குறி வைத்தே அமெரிக்கா விமானத் தாக்குதல் நடாத்த முனைப்புக் காட்டி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*