அவனிக்கு ஒளியான ஆதவன் !!!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அவனிக்கு ஒளியான ஆதவன் நாமத்தில்
இணையத்தில் ஒளியான கதிரவனே முதல் வணக்கம்.
வாசனைப் பூக்களாய் வாசகர் நெஞ்சத்தில்
பத்தாண்டாய் வாழ்ந்த உன்னை நெஞ்சத்தால் பாடவந்தேன்
தொழில் நுட்ப உலகத்தில் தொலைந்துவிட்ட
தொடர்புச் சாதனங்கள் அற்ற வேளையிலே
ஆற்றுப் படுத்தி எம்மை ஆழ்கடலில் முத்தெடுத்து,

முன்னின்று நித்திலத்தில் விழுதானாய் கதிரவனே
ஈழ்த்தில் போர் என்றால் அடுத்தடுத்துக் கதைகள் சொல்வாய்
தமிழ்மீது தடை என்றால் தரணி எங்கும்
வெடிபோட்டு விடைதேடி விண்ணதிர விடை சொல்வாய்
உன் வளர்ச்சிகண்டு கிளர்ச்சி கொண்டனர் சிலர்
கதிரவனைக் களையிலே கிள்ளக் கங்கணம் கட்டியவர் பலர்
முளையிலே கிள்ளி உன்னை மூடநினைத்த முட்டாள்கள் பலர்
வளர்ச்சியின் உயர்ச்சி கண்டு வம்பிற்கு உனை இழுத்து,

அம்பால் உனைத் துளைத்து ஆயிரம் கேள்வி கேட்டு
அடக்க நினைத்துச் சிறகை ஒடித்தவர் சிலர் – அதனால்தான்
நீ விழுந்த பள்ளங்கள் இணையத்தில் ஏராளம் – என்றாலும்
உனக்கு உலகத்தில் தமிழ் உள்ளங்கள் தாராளம்.

அக்கினிக் குஞ்சாய் அறன்வலி உறுத்தித்
தடைகளை உடைத்த தலைவனின் தம்பி நீ
அவனது வழி நின்று தமிழினில் வெறி கொண்டு
பல்சுவை அளித்துப் பக்கங்கள் பல கொண்டாய்
எம்மவர் விடிவிற்காய் உதித்த கதிரவனே
நூறாண்டு நீ வாழ்ந்து பாராளும் தமிழ் ஓங்க
தமிழோடு கைகோர்த்துத் தரணியிலே வாழ்ந்துவிடு
.
அன்புடன்
கங்கைமகன் – சுவிஸ்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*