சீனாவில் கோடீஸ்வரராக மாறிய பிச்சைக்காரர். அறிவுரை கூறிய பெண்ணுக்கு மிகப்பெரிய பரிசு.

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சீனாவை சேர்ந்த ஒரு பெண் 21 வருடங்களுக்கு முன் அனாதையாக இருந்த ஒருவருக்கு செய்த உதவியால் தற்போது $163,000 பணத்தை பரிசாக பெற்றுள்ளார். இந்த அதிசய சம்பவத்தின் தகவல்கள் பின்வருமாறு

சீனாவை சேர்ந்த Dai Xingfen என்பவர் கடந்த 21 வருடங்களுக்கு முன்னர் சாலையில் அனாதையாக பிச்சைகாரர் போல நின்றிருந்த ஒரு சிறுவனை பார்த்து பரிதாபப்பட்டு, அவரை அழைத்து சென்று உணவு வாங்கிக்கொடுத்து அவருடைய சொந்த ஊருக்கு செல்ல கையில் கொஞ்சம் பணமும் கொடுத்தார். அவருக்கு வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும் என்ற அறிவுரையை கூறி அனுப்பினார்.

Rongfeng என்ற அந்த 17 வயது இளைஞர் தனது சொந்த ஊருக்கு சென்று, Dai Xingfen அவர்கள் கொடுத்த சிறிய அளவு பணத்தை முதலீடாக வைத்து சிறிய அளவில் தொழில் ஆரம்பித்து பின்னர் படிப்படியாக முன்னேறி தற்போது சீனாவில் குறிப்பிட்டு சொல்லும்படி பெரிய பணக்காரராக மாறியுள்ளார்.

தன்னுடைய முன்னேற்றத்திற்கு அடித்தளம் போட்டு கொடுத்த Dai Xingfen அவர்களை பலவருட முயற்சிக்கு பின்னர் தற்போது தேடி கண்டுபிடித்து அவருக்கு ஒரு லட்சம் சீன யான் தொகையை பரிசாக கொடுத்துள்ளார். இந்த தொகை அமெரிக்க டாலரில் $163,000 பணத்திற்கு சமம். இந்த தொகையை பார்த்ததும் Dai Xingfen இன்ப அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*