கிணற்றில் விழுந்த பிள்ளையைக் காப்பற்றிய இராணுவத்தினருக்கு கெளரவிப்பு விழா!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

முல்லை. மாங்குளப்பகுதியில் கிணற்றில் விழுந்த குழந்தை ஒன்றை காப்பாறிய இரண்டு இலங்கை இராணுவத்தினரிற்கு கெளரவிப்பு விழா ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன் நிகழ்வானது நேற்று கிளிநொச்சி படை தலைமையகத்தில் இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தலைமையில் இடம்பெற்றது.

இன் நிகழ்வில், குழந்தையை காப்பாற்றிய கோப்ரல் எம்.டப்ளியூ. விஜித பெரேரா, கோப்ரல் டி.எம். லீலாரத்ன ஆகிய இரு இராணுவத்தினரிற்கு கெளரவித்து பரிசில்கள் வழங்கப்பட்டது. .

கடந்த 2 ஆம் திகதி மாங்குளம் பிரதேசத்தில் சேவையில் ஈடுபட்டிருந்த 57வது படைப் பிரிவு மற்றும் 3வது கஜபா படைப் பிரிவின் அதிகாரிகள் பிரதேசத்தை சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர்.

அந்தவேளை பிரதேசத்தில் உள்ள கிணறு ஒன்றில் பிள்ளை விழுந்துள்ளதுடன், காப்பாற்றுமாறு தாய் கதறி அழுததுடன் இராணுவத்தினரின் உதவியை கோரியுள்ளார்.

அதனை அடுத்து மேற்படி இராணுவ வீர்ர்களான கோப்ரல் எம்.டப்ளியூ. விஜித பெரேரா, கோப்ரல் டி.எம். லீலாரத்ன ஆகியோர் கிணற்றிக்குள் குதித்து சிவக்குமார் சிந்துஜன் என்ற பிள்ளையை காப்பாற்றியதுடன் குழந்தை குடித்திருந்த தண்ணீரை வெளியேற்றியுள்ளனர்.

மேற்படி இராணுவத்தின் நல்ல செயலை பாராட்டிய மக்கள் இதே போன்று இராணூவம் செய்யும் தவறுகளையும் மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தி உரிய தண்டனை வழங்கி நல்வழிப்படுத்தவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*