செருப்படி புகழ் நடிகை நயன கிருஷ்ணா ப்ளாக்மெயில் விவகாரத்தில் கைது…

பிறப்பு : - இறப்பு :

கன்னட நடிகை நயன கிருஷ்ணா மிரட்டல் மற்றும் பணம் பறிப்பு விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.சில கன்னடப் படங்களில் நடித்த நயன கிருஷ்ணாவுடன் சேர்த்து அவருடைய குழுவினர் என சொல்லப்படும் மேலும் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் டாக்டர் ஒருவரைச் சந்தித்து அவருடன் நெருக்கமாகப் பழகி அதை வீடியோவில் படம் எடுத்து வைத்து, அந்த டாக்டரை மிரட்டியதாக ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டவர்தான் இந்த நயன கிருஷ்ணா.

இந்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் நயனகிருஷ்ணா கைதானார் பின்னர் செப்டம்பர் மாதம்தான் ஜாமீனில் வெளியே வந்தார். ஆனால், தற்போது ஒரு புதிய குற்றச்சாட்டில் அவரை போலீசார் தற்போது கைது செய்திருக்கிறார்கள்.

வீடியோவில் படமாக்கப்பட்ட காட்சிகளை சம்பந்தப்பட்டவர்களிடம் காட்டி, அதை டிவி சேனல்களுக்கு அனுப்புவோம் என்று மிரட்டி, பல லட்சம் ரூபாயை பணமாகக் கேட்டிருக்கிறார்களாம்.

சமீபத்தில் வந்த புதிய புகாரை அடுத்து போலீசார் நயன கிருஷ்ணாவைக் கண்காணித்து வந்திருக்கின்றனர். நேற்று அவரை விசாரணைக்காக அழைத்த போது, அவரைக் கைது செய்திருக்கிறார்கள். இந்த விவகாரம் கன்னடத் திரையுலகில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறதாம்.

கடந்த 2012ஆம் ஆண்டு ரூ.8 லட்சம் மோசடி செய்துவிட்டதாக கூறி இயக்குனர் ரிஷி என்பவரை நடிகை நயன கிருஷ்ணாவின் குடும்பமே செருப்பால் அடித்ததாக எழுந்த புகாரை அடுத்து அவர் கைது செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.

சில வாரங்களுக்கு முன்னர்தான் தெலுங்குத் திரையுலகில் நடிகை ஸ்வேதா பாசுவை விபச்சார வழக்கில் கைது செய்தனர். தற்போது ஒரு கன்னட நடிகையை பிளாக்மெயில் விவகாரத்தில் கைது செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit