பார்பரிகா: மகாபாரத போரை ஒரு நொடியில் முடித்திருக்க கூடிய போர் வீரர்

பிறப்பு : - இறப்பு :

உலகத்தில் உள்ள மிகப்பெரிய காவியமாக கருதப்படுகிறது மகாபாரதம். அதில் பல பாத்திரங்களும் உள்ளது. இயற்கையாகவே, இந்த மிகப்பெரிய காவியத்தில் வரும் அனைத்து பாத்திரங்களையும் நினைவில் வைத்துக் கொள்வது ஒரு அன்னியருக்கு முடியாத காரியமாக இருக்கும்.

ஏன், நமக்கே கூட அதிலிருந்து சில பாத்திரங்களின் பெயர்கள் தான் தெரிந்திருக்க கூடும்.ஆனால் ஒவ்வொரு சிறந்த கதைகளில் வருவதை போல், மகாபாரதத்திலும் கூட பிரபலமாகாத பலர் இருக்கத் தான் செய்கிறார்கள். ஆனால் கதையில் அவர்களின் பங்கும் முக்கியத்துவத்தை பெற்றிருக்கும்.

திரௌபதி கூந்தலை முடியாமல் இருக்க காரணம் என்ன?

குருஷேத்ர போரை ஒரு நிமிடத்தில் முடித்திருக்க கூடிய ஒரு வீரரின் கதையை பற்றி தான் இப்போது பார்க்கப் போகிறோம். ஆச்சரியப்படாதீர்கள்! அவரை பார்பரிகா என்றும், காட்டு ஜி. பார்பரிகா என்றும் அழைக்கின்றனர். இவர் பீமனின் பேரனும், கடோட்கஜன் மற்றும் மௌர்வி ஆகியோரின் மகனும் ஆவார். குழந்தை பருவத்தில் இருந்தே மிகப்பெரிய போர் வீரனாக திகழ்ந்தார் அவர். மகாபாரத போரின் முன்பு, போரை முடிக்க எத்தனை நாள் தேவைப்படும் என அனைத்து போர் வீரர்களிடமும் கிருஷ்ண பரமாத்மா கேட்டார். அனைவரும் சராசரியாக 15-20 நாட்கள் ஆகும் என தெரிவித்தனர். பார்பரிகாவை கேட்ட போது தான் ஒரு நிமிடத்தில் போரை முடித்து விடுவதாக கூறினார்.

மகாபாரதத்தின் பாண்டவர்கள் மற்றும் திரௌபதி பற்றி யாருக்கும் தெரியாத அதிர்ச்சியூட்டும் ரகசியங்கள்!

அவரின் பதிலில் வியப்படைந்த கிருஷ்ணர், அது எப்படி சாத்தியமாகும் என அவரிடம் மீண்டும் கேட்டார். அப்போது சிவபெருமானால் தனக்கு வரமாக அளிக்கப்பட்ட மூன்று அம்புகளின் ரகசியத்தை பற்றி அவர் கூறினார். இந்த அம்புகளை கொண்டு ஒரு நிமிடத்தில் மகாபாரத போரை முடிவிடுவதாக பார்பரிகா கூறினார்.

அந்த முழுக்கதையைப் பற்றி தெரிய வேண்டுமா? தொடர்ந்து படியுங்கள்.

பார்பரிகா: மகாபாரத போரை ஒரு நொடியில் முடித்திருக்க கூடிய போர் வீரர்

ஒரு பெரிய போர் வீரனாக இருப்பதை தவிர, சிவபெருமானின் தீவிர பக்தனாகவும் விளங்கினார் பார்பரிகா. சிவபெருமானை குளிரச் செய்யும் நோக்கில் அவர் கடுமையான தவத்தில் ஈடுபட்டார். அதற்கு பலனாக மந்திர சக்தி அடங்கிய மூன்று அம்புகளை வரமாகவும் பெற்றார்.

தான் அழிக்க நினைக்கும் அனைத்து எதிரிகளையும் முதலில் குறி வைக்கும் முதல் அம்பு. மூன்றாம் அம்பை பயன்படுத்தும் போது, குறியிட்ட அனைவரையும் அது அழித்து விட்டு, மீண்டும் அவரின் அம்புக்கூட்டிற்குள் வந்து விடும். தான் காப்பாற்ற நினைக்க அனைத்து பொருட்களையும் மக்களையும் காப்பதற்கு இரண்டாம் அம்பு பயன்படும்.

அதன் பின் அவர் மூன்றாம் அம்பை பயன்படுத்தினால், குறியிடாத அனைத்தையும் அழிக்கும். புரியும் படியாக சொல்ல வேண்டுமானால், அழிக்க வேண்டிய அனைத்தும் முதல் அம்பை வைத்து குறிக்கலாம்; மூன்றாம் அம்பை வைத்து அவைகள் அனைத்தையும் ஒரே அம்பில் அழித்து விடலாம். அதனால் பார்பரிக்காவை ‘தீன் பாந்தரி’ அல்லது மூன்று அம்புகளை கொண்டவன் என்றும் அழைத்தனர்.

இந்த வரத்தை பற்றி கேட்ட கிருஷ்ணர், அவரை சோதிக்க முடிவெடுத்தார். அதனால் வெறும் மூன்று அம்புகளை கொண்டு பார்பரிகா போர் புரிவதை பற்றி கிண்டல் செய்த அவர், அவரின் சக்தியை வெளிப்படுத்த செயல்முறை விளக்கம் கேட்டார்.

கிருஷ்ணருடன் காட்டிற்கு சென்ற பார்பரிகா ஒரு மரத்தில் உள்ள இலைகளை எடுக்க முடிவெடுத்தார். பார்பரிகா கண்களை மூடிக்கொண்டிருந்த போது, மரத்தில் இருந்து ஒரு இலையை எடுத்த கிருஷ்ணர் தன் பாதத்திற்கு அடியில் அதை மறைத்து வைத்துக் கொண்டார். இலைகளை குறி வைக்க முதல் அம்பை பார்பரிகா எய்திய போது, அந்த மரத்தின் கடைசி இலையை குறிக்க வைக்க, அது இருந்த இடமான கிருஷ்ணரின் பாதத்தை நோக்கி சென்றது.

இதை பார்த்து வியந்த கிருஷ்ணர் தன் பாதத்தை தூக்கினார். உடனே அந்த இலையின் மீதும் கரு வைக்கப்பட்டது. அதன் பின் மூன்றாம் அம்பை எய்தியவுடன் அனைத்து இலைகளும் ஒன்று சேர்ந்து ஒரு இடத்தில் போடப்பட்டது.

பார்பரிகா பெற்ற வரத்தின் மீது இரண்டு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. முதல் நிபந்தனை – தன் சொந்த பகைக்காக இந்த அம்புகளை அவர் பயன்படுத்த முடியாது. இரண்டாம் நிபந்தனை – போர்களத்தில் பலவீனமான பக்கத்தில் இருந்து சண்டை போடும் போதே இந்த அம்புகளைப் பயன்படுத்த வேண்டும்.

பார்பரிகாவின் சக்தியை பார்த்த பின், குருஷேத்ர போரில் யாருக்கு ஆதரவாக சண்டை போடப்போவதாக கிருஷ்ணர் கேட்டார். அதற்கு கண்டிப்பாக பாண்டவர்கள் அணியில் இருந்து தான் போரிட போவதாக தெரிவித்தார். அதற்கு காரணம், அவர்களே கௌரவர்களை விட பலவீனமானவர்கள்.

பாண்டவர்களுடன் பார்பரிக்கா சேர்ந்து கொண்டால், தானாகவே அவர்கள் அணி வலுவடையும் என கிருஷ்ணர் கூறினார். அதனால் பார்பரிகா குழப்பமடைந்தார். இந்த வரத்தின் நிபந்தனையை நிறைவேற்ற அவர் அணியை மாற்றிக்கொண்டே இருக்க நேரிடும்.

அதனால் மனித இன பொது நலுனுக்காக தன் உயிரை தியாகம் செய்ய வேண்டும் என்பது தெளிவானது. அதற்கு காரணம் தான் இருக்கும் அணி மிகவும் சக்தி வாய்ந்த அணியாக மாறிவிடும். அதனால் அவரால் தன் சக்தியை பயன்படுத்தவே முடியாது.

அதனால் போர் நடக்கையில், இரண்டு அணிக்கும் மாறி மாறி போய் கொண்டிருக்க வேண்டி வரும். இதனால் இரண்டு அணியின் படைகளும் அழிந்து விடும். கடைசியில் அவர் ஒருவர் மட்டுமே மிஞ்சியிருப்பார். தான் ஒருவர் மட்டுமே போரில் உயிருடன் இருப்பதால், எந்த ஒரு அணிக்கும் வெற்றி கிடைக்க போவதில்லை. அதனால் போரில் அவர் பங்கு பெற வேண்டாம் என கிருஷணர் கேட்டுக் கொண்டார்.

கிருஷ்ணரின் ஆசையை ஏற்றுக் கொண்ட பார்பரிக்க தன் தலையை துண்டித்துக் கொண்டார். இறப்பதற்கு முன்பு, கிருஷ்ணரிடம் இருந்து ஒரு வரத்தை கேட்டார். அதாவது மகாபராத போரை தன் கண்களால் பார்க்க வேண்டும். அந்த வரத்தை அவருக்கு அளித்தார் கிருஷ்ணர். அவரின் தலையை மலையின் உச்சிக்கு எடுத்துக் சென்று போட்டார் பீமன். அதனால் மகாபராத போர் முழுவதையும் பார்பரிகாவால் காண முடிந்தது.

ராஜஸ்தானில் பார்பரிக்காவை காட்டு ஷ்யாம் ஜி-யாக வணங்குகின்றனர். கடவுளின் மீது வைத்த நம்பிக்கையினாலும், தன் உயிரையே தியாகம் செய்ததாலும், கிருஷ்ணரின் பெயரை (ஷ்யாம்) அவருக்கு வைத்துள்ளனர். தூய்மையான உள்ளத்தோடு பார்பரிகாவின் பெயரை உச்சரித்தால் வேண்டிய வரம் கிடைக்கும் என கிருஷ்ணர் அறிவித்துள்ளார்.

 

 

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit