venkat prapu in confuse with brother(தம்பி இது நமக்கு வேணாம் – பிரேம்ஜியால் வெங்கட்பிரபுக்கு வந்த தலைவலி )

பிறப்பு : - இறப்பு :

இன்றைய தேதியில் இயக்குனர் லிங்குசாமி சொன்ன மொத்த வித்தையையும் இறக்குறேன்’ என்கிற வார்த்தை தான் மொத்த இளைஞர்களின் நக்கல் மந்திரம். அஞ்சான் படம் வருவதற்கு முன்பு இயக்குனர் லிங்குசாமி ஒரு தனியார் டிவியில் அஞ்சான் படத்தில் என்னுடைய மொத்த வித்தையையும் இறக்குறேன் என்று வாசகத்தை கூறியுள்ளார். படம் படு தோல்வி அடைய அவரை நக்கல் அடித்து சமுக வலைதளங்களில் கிண்டல் செய்து வந்தனர் .இந்நிலையில் தற்போது மாஸ் திரைப்படத்தில் சூர்யாவை வைத்து இயக்கி வரும் வெங்கட் பிரபு ஒரு சிக்கலில் சிக்கியுள்ளார். அதாவது அவருடைய எல்லா படங்களிலும் தன் உடன்பிறப்பை அதாங்க பிரேம்ஜியை நடிக்க வைப்பது வழக்கம். இந்த படத்திலும் சூர்யாவுடன் நடித்து வருகிறார் பிரேம்ஜி.

பிரேம்ஜியின் ஸ்டைல் என்ன பார்த்தோமானால் ஒரு வரி டயலாக்கை திருப்பி திருப்பி படம் முழுவதும் சொல்லி கொண்ட இருப்பார் . சரோஜா சாமான் நிக்காலோ’ மாதிரி ஒரு பஞ்ச் கிடைக்க மாட்டேங்குதே என்று தேடிக் கொண்டு இருந்த அவருக்கு கிடைத்தது இந்த ‘மொத்த வித்தையையும் இறக்குறேன்’ , வெங்கட் பிரபுக்கு பிரேம்ஜி பாணியில் சொன்ன போது அவரே குப்பற விழுந்து சிரித்து விட்டார், இருந்தாலும் இது வேணாம் தம்பி இந்த படத்துக்கு என்று சொல்லிவிட்டாராம்.

பின்னே சூர்யா வைத்து இயக்கிய லிங்குசாமியை இதிலும் கிண்டல் செய்தால் பிரச்சனை ஆகிவிடும், அதுவும் இல்லாமல் வெங்கட் பிரபு லிங்குசாமிக்கு சப்போர்ட் செய்து வேற பேசியுள்ளார். இதனால் அவருக்கு தானே பிரச்சனை ஆனால் “தம்பியுடையான் எதற்கும் அஞ்சான் என்ற ரேஞ்சில் அண்ணன் பேச்சை கேட்காமல் இது தான் என் ஒரு வரி பஞ்ச் என்று அடம் பிடிக்கிறாராம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit