டைட்டிலைப் படித்து கற்பனையை தறிகெட்டு அலையவிட்டவர்கள் ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். நைட் ஷோ என்பது நயன்தாரா நடித்திருக்கும் படம்.
ஆரியுடன் இணைந்து அறிமுக இயக்குனர் அஸ்வின் சரவணனின் இயக்கத்தில் நயன்தாரா ஒரு படம் நடித்து வருகிறார். ஹாரர் படமான இதற்கு நைட் ஷோ என்று பெயர் வைத்துள்ளனர். இதில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக வருகிறார் நயன்தாரா.
சத்தமில்லாமல் படத்தை ஆரம்பித்து அதே சைலண்டுடன் படத்தை முடித்திருக்கிறார்கள். சிம்புவுடன் நடித்த இது நம்ம ஆளு, உதயநிதியுடன் நடிக்கும் நண்பேன்டா, ஜெயம் ரவியுடன் நடித்து வரும் தனி ஒருவன் ஆகிய படங்களுக்கெல்லாம் முன்னதாக நைட் ஷோ திரைக்கு வருகிறது.