தலையை துண்டிக்கும் கொடிய திவிரவாதியினை கொல்லுங்கள் பிரிட்டன் பிரதமர் ஆவேசம்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

isis_increases_005

பிணைக் கைதிகளின் தலை துண்டிப்புகளை நடத்தும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதியை கொலை செய்யுமாறு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் உத்தரவிட்டுள்ளார்.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக செயற்பட்ட அமெரிக்காவை அச்சுறுத்தும் வகையில், அந்நாட்டு பிரஜைகளான பத்திரிகை நிருபர்கள் ஜேம்ஸ் போலே, ஸ்டீவன் சாட்லாப், இங்கிலாந்து தொண்டு நிறுவன ஊழியர் டேவிட் ஹெய்ன்ஸ் என 3 பேரின் தலையை துண்டித்து படுகொலை செய்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஆலன் ஹென்னிங் படுகொலை செய்த காணொளி வெளியான 12 மணி நேரத்தில், பிரித்தானியாவின் உளவு அமைப்புகளான எம் 15, எம் 16 மற்றும் ஜிசிஎச்கியூ ஆகியவற்றின் தலைவர்களை, பிரித்தானிய பிரதமர் கமரூன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் கூறியதாவது,

பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளவர்களை தலையை துண்டித்து கொலை செய்து வருகிற ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி ஜானின்  இருப்பிடத்தைக் கண்டு பிடித்து கொல்லவோ அல்லது உயி ரோடு பிடிக்கவோ உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit