விபசார வழக்கில் சிக்கிய சுவேதாவுக்கு மற்றொரு இயக்குனர் பட வாய்ப்பு…!!

பிறப்பு : - இறப்பு :

விபசார வழக்கில் சிக்கிய சுவேதா பாசுக்கு மற்றொரு இயக்குனர் தனது படத்தில் நடிக்க வாய்ப்பு தருகிறார்.தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்திருப்பவர் சுவேதா பாசு. இவர் கடந்த மாதம் ஐதராபாத்தில் விபசார தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் மகளிர் காப்பகத்தில் அடைக்கப்பட்டார். குடும்பத்தை காப்பாற்றுவதற்காக விபசாரம் செய்ததாக சுவேதா போலீசிடம் வாக்கு மூலம் கொடுத்தார். இது அவர் மீது பரிதாபத்தை ஏற்படுத்தியது. பல நடிகைகள் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். பாலிவுட் இயக்குனர் ஹன்சல் மேத்தா தான் இயக்கும் படத்தில் சுவேதாவுக்கு நடிக்க வாய்ப்பு தருவேன் என்று அறிவித்தார்.

தற்போது மற்றொரு பாலிவுட் இயக்குனர் விஷால் பரத்வாஜ், சுவேதாவுக்கு பட வாய்ப்பு தர முன்வந்திருக்கிறார். ஏற்கனவே இவர் கடந்த 2002ம் ஆண்டு இயக்கிய ‘மக்தீ படத்தில் குழந்தை நட்சத்திரமாக சுவேதாவை நடிக்க வைத்தவர்.

இதற்கிடையில் மகளிர் காப்பகத்தில் இருக்கும் சுவேதாவை வீட்டில் தங்கி இருக்க அனுமதிக்க வேண்டும் என்று அவரது தாயார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந் தார். அதை நீதிபதி ஏற்காமல் சமீபத்தில் தள்ளுபடி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

swetha-basu-prasad-new-ride-movie-

suvetha basu

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit