மாவை – விக்கியின் சர்ச்சைக்கு​ரிய கருத்துகள் – வீரகேசரி ஆசிரியர் தலையங்கம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தமிழ்த் தேசி­யக்­ கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் கட்சி தலை­வர்­க­ளுக்­கி­டையே முரண்­பா­டுகள் அதி­க­ரித்து வரும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. தமிழ்த் ­தே­சி­யக்­ கூட்­ட­மைப்பை தனி­யொரு கட்­சி­யாக பதிவு செய்­ய­வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப்., ரெலோ, புௌாட் ஆகிய கட்­சிகள் உள்­ளன. ஆனால் இவ்­வா­றான பதி­வினை மேற்­கொள்­வ­தற்கு கூட்­ட­மைப்பின் பிர­தான கட்­சி­யான இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்சி விரும்­ப­வில்லை என்றே தெரி­கின்­றது.

தற்­போது லண்­ட­னுக்கு விஜயம் செய்­துள்ள தமிழ்த் தேசி­யக்­ கூட்­ட­மைப்பின் செய­லா­ளரும் இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வ­ரு­மான மாவை சேனா­தி­ராஜா தமிழ்த் தேசி­யக்­ கூட்­ட­மைப்பு ஒரு தனிக்­கட்­சி­யாக பதிவு செய்­யப்­ப­ட­மாட்­டாது. அது கட்­சி­களின் கூட்­ட­மைப்­பா­கவே தொடர்ந்தும் செயற்­படும் என்று அறி­வித்­தி­ருக்­கின்றார்.

தமிழ்த் தேசி­யக்­ கூட்­ட­மைப்பை தனிக்­கட்­சி­யாக பதிவு செய்வோம் என்ற வாக்­கு­று­தியை நானோ எனது கட்சித் தலை­வர்­களோ ஒரு­போதும் வழங்­க­வில்லை. கூட்­ட­மைப்பை தனிக்­கட்­சி­யாக பதிவு செய்­வது நடை­மு­றைக்கு சாத்­தி­ய­மற்­றது என்றும் மாவை சேனா­தி­ராஜா எம்.பி. தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

தமி­ழ­ர­சுக்­கட்­சியின் புதிய தலை­வ­ராக பொறுப்­பேற்­றுள்ள மாவை சேனா­தி­ராஜா எம்.பி. கூட்­ட­மைப்பு தொடர்பில் தெரி­வித்­துள்ள இத்­த­கைய கருத்­தா­னது நிச்­ச­ய­மாக கூட்டுக் கட்­சி­களின் தலை­வர்கள் மத்­தியில் பெரும் அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்தும் என்­பது திண்ண­மாகும். ஏனெனில், ஐந்து கட்­சி­களைக் கொண்ட கூட்­டாக தமிழ்த்தேசி­யக்­கூட்­ட­மைப்பு செயற்­பட்டு வரு­கின்­றது. இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப்., ரெலோ, புௌாட், தமிழர் விடு­த­லைக்­கூட்­டணி ஆகிய கட்­சி­க­ளையே கூட்­ட­மைப்பு உள்­ள­டக்­கி­யுள்­ள­போ­திலும் வீ. ஆனந்­த­சங்­கரி தலை­மை­யி­லான தமிழர் விடு­த­லைக்­கூட்­டணி ஏற்­க­னவே முரண்­பட்ட நிலை­யி­லேயே காணப்­ப­டு­கின்­றது.

கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்­சி­க­ளுக்கு எதி­ராக தமிழர் விடு­த­லைக்­கூட்­ட­ணியின் தலைவர் வீ. ஆனந்­த­சங்­கரி அறிக்­கை­களை விடுத்து வரு­கின்றார். இதேபோல் இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­மோ­டிக்குக் கூட கடி­த­மொன்­றையும் அவர் அனுப்­பி­வைத்­தி­ருக்­கின்றார்.

இந்த நிலையில் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியை தவிர ஏனைய கட்­சிகள் கூட்­ட­மைப்பு பதிவு செய்­யப்­ப­ட­வேண்டும் என்ற நிலைப்­பாட்டை வலி­யு­றுத்­தி­ வ­ரு­கின்­றன. கடந்த சில வரு­டங்­க­ளா­கவே கூட்­ட­மைப்­பிற்கு யாப்­பொன்று உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டு­மென்றும் அந்த யாப்பின் அடிப்­ப­டையில் கூட்­ட­மைப்பு பதிவு செய்­யப்­ப­ட­வேண்­டு­மென்றும் ரெலோ மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்­சி­களின் தலை­வர்கள் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.

கடந்த வருடம் இவ்­வி­டயம் தொடர்பில் மன்னார் மறை­மா­வட்ட ஆயர் இரா­யப்பு ஜோசப் ஆண்­ட­கையின் ஏற்­பாட்டில் கூட்­ட­மொன்று நடை­பெற்று அதில் பதிவு தொடர்பில் வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது. ஆனாலும் பதி­வுக்­கான செயற்­பா­டு­களை மேற்­கொள்­வதில் இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்சி இழுத்­த­டிப்­புப்­போக்­கையே கடைப்­பி­டித்து வந்­தது. இந்த நிலை­யி­லேயே கூட்­ட­மைப்பை பதிவு செய்­யப்­போ­வ­தில்லை என்று மாவை சேனா­தி­ராஜா எம்.பி. லண்­டனில் நடை­பெற்ற நிகழ்­வொன்றில் அறி­விப்பு செய்­தி­ருக்­கின்றார்.

கடந்த வியா­ழக்­கி­ழமை யாழ்ப்­பா­ணத்தில் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும் மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளு­ட­னான சந்­திப்பு இடம் பெற்­றி­ருந்­தது. கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் தலை­மையில் நடை­பெற்ற இந்த கலந்­து­ரை­யா­டலில் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வ­ரனும் கலந்து கொண்­டி­ருந்தார்.

இங்கு இடம் பெற்ற கலந்­து­ரை­யா­ட­லின்­போது கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் சகல கட்­சி­க­ளையும் பொது­வான அடிப்­ப­டையில் முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் நோக்­க­வேண்­டு­மென கருத்து தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதன் போது தமிழ்த் தேசி­யக்­ கூட்­ட­மைப்­புடன் இணைந்து ஜன­நாயக வழியில் இயங்­கிக்­கொண்­டி­ருக்கும் முன்னாள் ஆயுதப் ­போ­ராட்ட அமைப்­புக்­க­ளுடன் சேர்ந்து இயங்க முடி­யாது என முதல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் கூறி­யுள்ளார்.

முத­ல­மைச்­சரின் இத்­த­கைய கூற்­றா­னது அந்­தக்­கூட்­டத்தில் பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. முத­ல­மைச்­சரின் இந்தக் கூற்று தொடர்பில் கருத்துத் தெரி­வித்த ஈ.பி. ஆர்.எல்.எவ். கட்­சியின் தலை­வரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் முத­ல­மைச்­சரின் கூற்று எம்மை வன்­மு­றை­யா­ளர்­க­ளாக சித்­தி­ரிக்கும் முயற்­சி­யாகும். வட­மா­காண முத­ல­மைச்சர் வேட்­பாளர் தெரி­வுக்­காக தற்­போ­தைய முத­ல­மைச்­சரை நாடிய போது கூட்­ட­மைப்­பி­லுள்ள ஒரு கட்­சி­யினர் மட்டும் கேட்டால் போதாது. அனைத்துக் கட்­சி­யி­னரும் கேட்­க­வேண்­டு­மென கோரி­யி­ருந்தார். இதற்­க­மைய கூட்­ட­மைப்பின் தலைவர் எம்­மோடு பேசி கூட்­ட­மைப்பின் அங்­கத்­துவக் கட்­சிகள் அனைத்­தி­னதும் சம்­ம­தத்தை வெளியிட்­டி­ருந்தார். இப்­போது ஆயு­தப்­போ­ராட்ட வழியில் வந்­த­வர்­க­ளாக எம்மை பார்க்கும் முத­ல­மைச்சர் எதற்­காக அப்­போது பார்க்­க­வில்லை என்று கேள்வி எழுப்­பி­யுள்ளார்.

1987 ஆம் ஆண்டு இந்­திய- இலங்கை ஒப்பந்­தத்தின் பின்னர் நாங்கள் ஆயு­தங்­களை கைவிட்டு ஜன­நா­யக வழியில் இயங்கி வரு­கின்றோம். எங்கள் கட்­சிகள் இலங்­கையில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. விடு­த­லைப்­பு­லிகள் காலத்தில் கூட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­பட்­ட­போதும் எங்­க­ளையும் இணைத்­துக்­கொண்டே புலிகள் கூட்­ட­மைப்பை உரு­வாக்­கினர். நிலைமை இவ்­வாறு இருக்க 30 வரு­டங்­க­ளுக்­கு­ முற்­பட்ட எங்கள் வழியை சுட்­டிக்­காட்­டு­வது நடைமுறைக்கும் ஜன­நா­யகத் தன்­மைக்கும் முர­ணா­ன­தா­கவே இருக்கும். ஆயு­தப் ­போ­ராட்டம் தீண்­ட­த்த­கா­த­தா­கவும் அந்த வழியில் இருந்­த­வர்கள் தீண்­டத்­ ­தகா­த­வர்­க­ளா­கவும் அடை­யா­ளப்­ப­டுத்­து­வ­தா­கவே முத­ல­மைச்­சரின் கருத்து உள்­ளது. இது எமக்கு கவ­லையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. அவ­ரது கருத்து தியா­கங்­களை கொச்­சைப்­ப­டுத்­து­கின்­றது என்றும் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் கண்­டனம் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

உண்­மை­யி­லேயே வட­மா­காண முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக சி.வி. விக்­கி­னே­ஸ்­வ­ரனை அழைத்­த­போது கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலை­வர்­களும் ஒன்­றி­ணைந்து அழைத்தால் மட்­டுமே வேட்­பா­ள­ராக வர முடியும் என்று நீதி­ய­ரசர் விக்­கி­னேஸ்­வரன் அன்று தெரி­வித்­தி­ருந்தார். அதற்­கி­ணங்க கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் சகல கட்­சி­களும் ஒன்­றி­ணைந்தே விக்­கி­னேஸ்­வ­ரனை வேட்­பா­ள­ராக நிறுத்தி இருந்­தன.

ஆனால் தற்­போ­தைய நிலையில் இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியை சார்ந்த வகை­யி­லேயே முத­ல­மைச்­சரின் செயற்­பா­டுகள் அமைந்­தி­ருக்­கின்­றன. இது குறித்து ஏனைய கட்சித் தலை­வர்கள் கேள்வி எழுப்­பிய­போதே முத­ல­மைச்சர் இத்­த­கைய ஒரு கருத்­தினை தெரிவித்திருக்­கின்றார். இந்தக் கருத்தும் கூட்­ட­மைப்பின் கட்சித் தலை­வர்கள் மத்­தியில் பெரும் அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

அடுத்த வருடம் ஜனா­தி­பதி தேர்­தலை நடத்­து­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. அதற்­குப்­பின்னர் பாரா­ளு­மன்றத் தேர்­தலும் வரக்­கூ­டிய சூழல் உரு­வா­கி­யுள்­ளது. இந்த நிலையில் தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்­கான தீர்வு இழுத்­த­டிக்­கப்­பட்டு வரு­கின்­றது. இவ்­வா­றான சூழலில் தமிழ்த் ­தே­சி­யக்­ கூட்­ட­மைப்­பிற்குள் முரண்­பாடு­களும் முறுகல் நிலையும் ஏற்­ப­டு­வது என்­பது தமிழ் மக்­க­ளுக்கு பாதிப்­பையே ஏற்­ப­டுத்தும்.

தமிழ்த் தேசி­யக்­ கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் கட்­சிகள் ஒற்­று­மை­யா­கவும், ஒரு­மைப்­பாட்­டு­டனும் இருக்­க­வேண்டும் என்பதையே தமிழ் மக்கள் விரும்புகின்றனர். கடந்த வடமாகாணசபைத் தேர்தலில் 80 வீதமான வடமாகாண மக்கள் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்கியிருந்தனர். கிழக்கிலும் இதே நிலையே காணப்பட்டது. கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மக்கள் தமது ஆதரவினை வழங்கியிருந்தனர்.

தமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட்டு நிற்பதானது தமக்கு பலம் என்ற நிலைப்பாட்டை தமிழ் மக்கள் கொண்டிருக்கின்றனர். ஆனால் தற்போதைய நிலையில் கூட்டமைப்பில் அங்கும் வகிக்கும் கட்சியினர் மத்தியில் முரண்பாடுகள் ஏற்படுவதானது மக்களைப் பொறுத்தவரையில் கவலையான விடயமேயாகும். அரசியல் நோக்கங்களைக் கொண்டவகையிலான செயற்பாடுகளை தவிர்த்து தமிழ் மக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முரண்பாடுகளை தவிர்ப்பதற்கு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைமைகள் முயலவேண்டும். தற்போதைய நிலையில் இதுவே தேவையாக உள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*