ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் இருப்பது யு.எஸ்,சீனாவின் ஆயுதங்களும் தளவாடங்களுமே.. திடுக் தகவல்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சிரியா, ஈராக்கில் பெரும் பகுதிகளை கைப்பற்றி உலகை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ்.தீவிரவாதிகள் வசம் இருப்பவை பெரும்பாலும் அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் ஆயுதங்களும் தளவாடங்களும்தான் என திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிரியா, ஈராக்கின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றி இஸ்லாமிய தேசம் என்ற தனிநாட்டை பிரகடனப்படுத்தியுள்ளனர் ஐ.எஸ். தீவிரவாதிகள்.

இந்த இயக்கத்தின் விஸ்வரூபமானது உலக நாடுகளை அச்சுறுத்தி வருவதால் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக உக்கிரமான வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் ஆயுதக் கடத்தல் தொடர்பான அமைப்பு ஒன்று ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆயுதங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: சிரியா, ஈராக் போன்ற நாடுகளுக்கு அமெரிக்கா, முந்தைய சோவியத் யூனியன், சீனா, தற்போதைய ரஷ்யா, செர்பியா என பல நாடுகள் ஆயுத உதவி செய்தன.

தற்போது சிரியா மற்றும் ஈராக் படைகள் மீது தாக்குதல் நடத்திய ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்த ஆயுதங்களையும் ராணுவ தளவாடங்களையும் கைப்பற்றி தங்கள் வசம் வைத்திருக்கின்றனர். சிரியாவில் உள்நாட்டு கிளர்ச்சி நடைபெற்ற போதும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் போராளிக் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கின. இவையும் கூட இப்போது ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமாகிவிட்டது.

சிரியா ராணுவத்தை எதிர்த்து தாக்குதல் நடத்தும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் முதன்மை இலக்கே ராணுவத்தின் ஆயுதக் கிடங்குகளாக மட்டுமே இருக்கிறதாம். கடந்த ஆண்டு ஹமா அருகே சிரியாவின் வான்படை தளத்தைக் கைப்பற்றிய உடனே அங்கிருந்த ராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள், வெடிபொருட்களை பல டிரக்குகளில் ஏற்றி வெளியே அனுப்பி வைத்திருக்கின்றனர்.

இஸ்லாமிய தீவிரவாதிகள் வெடிபொருட்களை கள்ளச் சந்தையில் வாங்கிக் குவித்து வைத்திர்க்கின்றனராம். இஸ்லாமிய தீவிரவாதிகளின் வெடிபொருட்களில் 80% சீனா தயாரிப்புகள், முன்னாள் சோவியத் யூனியன், அமெரிக்கா, தற்போதைய ரஷ்யா அல்லது செர்பியா.

http://www.kathiravan.com/?page_id=1302

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*