பொது பல சேனாவுடன் ஐ.தே.க கூட்டுச்சேரும்; திஸ்ஸ அத்தநாயக்க

பிறப்பு : - இறப்பு :

மகிந்த ராஜபக்­வின் இந்த அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து கட்சிகளுடனும் இணைந்து வலுவான கூட்டணி ஒன்றை அமைப்பதே ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான நோக்கமாகும்.

தேர்தல் வெற்றிக்காக பொது பல சேனாவு டனும் ஐக்கிய தேசியக் கட்சி கூட்டுச் சேரத் தயாராகவுள்ளது என்றும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாக தங்களுடைய கொள்கைத் திட்டங்களைப் பரிசீலிக்குமாறு பொது பல சேனா விடுத்துள்ள வேண்டுகோளை ஐக்கிய தேசியக் கட்சி கருத்தில் கொள்ளும் எனவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

வேட்பாளர் ஒருவரை களம் இறக்கு மாறும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தன்னைச் சந்தித்த ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆலோசனை வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்காமல் ஐக்கிய தேசியக் கட்சி தனியாக போட்டியிடும் எனவும், ஜனாதிபதி வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கி ரமசிங்க போட்டியிடுவார் எனவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அண்மையில் இலண்டனுக்கு சென்றிருந்த போது, அங்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை சந்தித்துப் பேசிய போதே இந்த ஆலோசனை வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்தச் சந்திப்பின் போது இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை நீக்குவதற்கான நேரம் வந்து விட்டது எனவும், இதனால் சகல கட்சிகளும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதே புத்திசாலித்தனம் என்றும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சந்தி ரிகா குமாரதுங்க சுட்டிக்காட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் கவனம் செலுத்துமாறும், அவர் வெற்றி பெற்ற பின்னர் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை நீக்குமாறும், அதுவே ரணில் விக்கிரமசிங்க பிரதமர் ஆவதற்கு வழிவகுக்கும் என்றும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சந்திரிகா குமாரதுங்க அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit