10 வயதில் எனக்கு கிடைத்த சாவித்திரி. ராம்கோபால் வர்மாவின் அதிர்ச்சி பேட்டி.

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

0335b35c3e535fa22cb9dae8cc54a7ae

சர்ச்சைகளும் ராம்கோபால் வர்மாவும் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் போல என்றுமே பிரியாதவை. தனது படங்கள் மூலமும், சமூக வலைத்தளங்கள் மூலமும் ஏதாவது ஒரு பிரச்சனையை கிளப்பி சர்ச்சையில் சிக்காவிட்டால் ராம்கோபால் வர்மாவுக்கு தூக்கம் வராது. சமீபத்தில் விநாகரின் தலையை கொய்த சிவன், அல்கொய்தா தீவிரவாதியை விட கொடுமையானவர் என்ற கருத்தை தெரிவித்து அதற்காக கோர்ட் படியேறிக்கொண்டிருக்கும் நேரத்தில் தற்போது மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் இயக்குனர் ராம்கோபால் வர்மா.

தற்போது அவர் தயாரித்து இயக்கி வரும் ‘சாவித்திரி’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. கிளாமரான ஆசிரியை ஒருவரின் இடுப்பை பத்து வயது மாணவன் உற்று பார்ப்பது போல் ஒரு போஸ்டரும், அதே ஆசிரியையின் தொப்புள் அருகே ஏக்கமாக ஒரு மாணவன் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு போஸ்டரையும் ராம்கோபால் வர்மா வெளியிட்ட்டுள்ளார்.

இந்த போஸ்டர் குறித்து அவர் குறிப்பிடுகையில் ‘நான் சிறுவயதில் பார்த்த இங்கிலீஷ் டீச்சர்தான் இந்த படத்தின் சாவித்திரி கேரக்டர். எனக்கு கிடைத்த சாவித்திரிபோல் உங்கள் வாழ்க்கையிலும் பல சாவித்திரிகள் இருப்பார்கள்’’ என்று கூறியுள்ளார்.

அவ்வளவுதான் ஆந்திரா முழுவதும் தீ பற்றியதுபோல் அவருடைய வார்த்தைகள் பற்றி எரிகின்றன. புனிதமான ஆசிரியை தொழிலை கேவலப்படுத்திவிட்டார் என்று பெண்கள் அமைப்புகள் கொதித்து எழுந்துள்ளன. பெண்கள் அமைப்புக்கு பதிலளித்துள்ள ராம்கோபார் வர்மா “என் வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை தெரிவிக்க எனக்கு உரிமை உள்ளது. எனவே இதில் எந்த தவறும் இல்லை’’ என்றார். இது எரிகிற கொள்ளியில் எண்ணையை ஊற்றியது போல் இருந்தது பெண்கள் அமைப்புகளுக்கு. பெண்கள் அமைப்பு கொடுத்த புகாரின் அடிப்படையில் ராம்கோபால் வர்மா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் குறித்து விளக்கம் அளிக்கும்படி ராம்கோபால் வர்மா, சினிமா தணிக்கைகுழு, நகர போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு குழந்தைகள் அல அமைப்பு நோட்டீசு அனுப்பி உள்ளது. இதனால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit