ஐ.தே.க.வின் பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை அறிவிக்க வேண்டும்: ஹரீன் பெர்ணான்டோ

பிறப்பு : - இறப்பு :

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேமதாஸவின் பெயரை முன்மொழிய வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஊவா மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவருமான ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கொலன்னாவை பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தல் பொறுப்புக்களை பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் கட்சியினரிடம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெற்றி கிடைப்பது உறுதி என்றும் ஹரீன் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை முன்மொழிய வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது சுட்டிக்காட்டத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit