பாரிய அழிவுகளை தடுத்து நிறுத்தியருந்தால் சர்வதேச விசாரணை தேவையற்றிருக்கும்

பிறப்பு : - இறப்பு :

பாரிய அழிவுகள் இடம்பெற்றபோது அதனை தடுத்து நிறுத்தியிருந்தால் இன்று சர்வதேச விசாரணை பொறிமுறையொன்று தேவையற்றதாக இருந்திருக்கும் என தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவர் எஸ். துஸ்யந்தன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய முன்னணியின் வவுனியா அலுவலகத்தில் இன்று (05) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களுக்க கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

இன்று சர்வதேச பொறிமுறை என்பதனை நாம் எமது பார்வையில் எடுத்துக்கொள்ளும் போது பாரிய யுத்தம் இடம்பெற்று மனித அழிவுகள், சொத்தழிவுகள் உட்பட பாரிய அழிவுகள் இடம்பெற்றபோது அதனை நிறுத்தியிருந்தால் இன்று இவ் விசாரணை தேவையற்ற ஒன்று.

எனினும் சர்வதேச விசாரணை பிழையான ஒன்று என சொல்வதற்கு நாம் தயார் இல்லை. ஏனெனில் பல பிரச்சனைகளும் போரழிவுகளும் அங்கு இடம்பெற்றிருக்கின்றது. எனவே நாங்கள் சர்வதேச விசாரணையை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கமுடியாது.

அத்துடன் இராணுவம் தமிழர் பகுதியில் காணிகளை ஆக்கிரமிப்பதனை நாம் முழுமையாக எதிர்க்கின்றோம். அது தமிழ் பிரதேசம் அங்கு அவர்களுக்கான காணிகள் இருந்ததற்கான வரலாறுகள் இல்லை. எனவே நாம் எதிர்க்கின்றோம்.

அத்துடன் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்த வேண்டும். அத்துடன் அண்மையில் யாழ்ப்பாணத்தில் இதற்காக உண்ணாவிரதம் இடம்பெற்றிருந்தது. அவ்வாறான போராட்டங்களுக்கு எமது ஆதரவு என்றும் இருக்கும்.

எனவே அரசாங்கம் அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்த வேண்டும். இது தொடர்பாக நாமும் அரசுக்கு பல தடவைகள் எடுத்து கூறியுள்ளோம். அதற்கு அவர்களும் துரிதப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர் கூறினார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit