சென்னை நட்சத்திர ஓட்டலில் ஷாருக்கானும் திபிகாவும் 3 மணி நேரம் ஒரே அறையில்..!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஹேப்பி நியூ இயர் என்ற இந்தி படத்தில் ஷாருக்கான் நடிக்கிறார். இதில் இன்னொரு நாயகனாக அபிஷேக் பச்சன் நடிக்கிறார். நாயகியாக தீபிகா படுகோனே வருகிறார். இந்த படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டதிட்டுள்ளனர். ஷாருக்கான் படங்களுக்கு தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பு இருப்பதால் இங்கும் நிறைய தியேட்டர்களில் ரிலீஸ் செய்கிறார்கள்.

ஹேப்பி நியூ இயர் படத்தை தமிழகத்தில் விளம்பரபடுத்துவதற்காக ஷாருக்கான், தீபிகா படுகோனே ஆகியோர் நேற்று சென்னை வந்தனர். கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இருவரும் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதையொட்டி மாடல் அழகிகளின் ஆடை அலங்கார நிகழ்ச்சி நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஷாருக்கானும் தீபிகா படுகோனேயும் மாலை 4 மணிக்கு ஓட்டலுக்கு வந்து விட்டனர். ஆனால் இரவு 7 மணிவரை நிகழ்ச்சியில் பங்கேற்க வரவில்லை. பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுப்பதிலும் தாமதம் செய்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்களிடம் அழைப்பிதழ் கேட்டு கெடுபிடியும் நடந்தது. இதனால் விழாவுக்கு வந்திருந்த பலர் கடுப்பாகி வெளிநடப்பு செய்தனர். கூச்சல் குழப்பம் மற்றும் ரகளையாக இருந்தது.

ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் 3 மணி நேரம் பூட்டிய அறைக்குள் ஷாருக்கானும், தீபிகா படுகோனேவும் இருந்துள்ளனர். பலமுறை ஷாருக்கானின் உதவியாளர்கள் விசயத்தை கூற நினைத்தும் பலன் இல்லை. இறுதியாக 7 மணிக்கு மேல் தான் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கே வந்தார். அதற்குள் பல முக்கிய விருந்தினர் விழாவை புறக்கணித்து வெளியேறி விட்டனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*