மாணவர்கள் மீது தண்ணீர் வீச்சு ; பொலிஸ் வெறியாட்டம் (படங்கள் இணைப்பு)

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

sap

இன்று காலை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் புதிய கட்டடமொன்றை திறந்து வைப்பதற்கு சென்ற உயர்கல்வி அமைச்சர் எஸ் பி திஸாநாயக்கவுக்கும் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாரினால் தண்ணீர் வீசி தாக்குதல்  மேற்கொள்ளப்பட்டது.

குறித்த கட்டிடத்தை திறக்க உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க சென்றபோது பம்பகின்ன சந்தியில் அமைச்சரை வழிமறித்த வகையில் மாணவர்கள் இன்று  காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.    இதன்போது குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட மாணவர்களை அகற்றவென பொலிஸார் தண்ணீர் வீசி தாக்குதல் நடத்தினர்.

இதனால் குறித்த பகுதி பதற்றமாகக் காணப்பட்டது.   எனினும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க விடுதி கட்டிடத்தை திறந்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit