நித்யானந்தா ஆசிரமத்தில் நடிகை நயன்தாரா? திடுக்கிடும் தகவல்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

இரண்டு காதல் தோல்வியால் மனமுடைந்து இருக்கும் நடிகை நயன்தாராவை மன அமைதிக்காக நித்யானந்தா ஆசிரமத்துக்கு வருமாறு, ஆசிரமம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த அழைப்பை நயன்தாரா நிராகரித்துவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நயன்தாரா ஏற்கனவே இரண்டு முறை காதல் விஷயங்களில் ஏமாற்றம் அடைந்துள்ளார். ;சிம்புவுடன் ஏற்பட்ட முதல் காதல் தோல்வியில் முடிந்து அதன்பின்னர் பிரபுதேவாவுடன் ஏற்பட்ட இரண்டாவது காதலும் அவருக்கு கைகூடவில்லை. இதனால் இனிமேல் காதலே வேண்டாம் என்ற தீர்மான முடிவில் அவர் இருந்து வருகிறார். காதலுக்காக அவர் கிறிஸ்துவ மதத்தில் இருந்து இந்துவாக மாறியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒருசில கதாநாயகர்கள் அவரை காதலிப்பதாக கூறி நெருங்கிய போதிலும் யாருக்கும் பிடிகொடுக்காமல் சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றார். இருப்பினும் அவ்வப்போது அவர் மன அமைதிக்காக யோகா, தியானம் ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் ஏமாற்றங்களால் விரக்தியில் இருக்கும் நயன்தாராவுக்கு மனஅமைதி கிடைக்க தங்கள் ஆசிரமத்திற்கு வருமாறு நித்யானந்தா ஆசிரமத்தை சேர்ந்த சிலர் அவரை தொடர்பு கொண்டு அறிவுரை கூறியுள்ளதாக கூறப்படுகிறது. அவரை போலவே மன அமைதி இழந்த பல பெண்கள் ஆசிரமத்திற்கு வந்து தியானம் மற்றும் யோகா மூலம் தங்கள் மனக்கவலைகளை தீர்த்து வருவதாக அவருக்கு ஒருசிலர் ஆலோசனை வழங்கியுள்ளனர். ஆனால் நயன்தாரா அவர்களுடைய அழைப்பை நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit