தாய்லாந்து மன்னர் கடுமையான காய்ச்சலுடன் வைத்திய சாலையில் அனுமதி

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தாய்லாந்து மன்னர் புமிபோல் அடுலையாடேஜ் கடுமையான காய்ச்சலுடனும் வழமைக்கு மாறான இரத்த அழுத்தத்துடனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாக அரச மாளிகை சனிக்கிழமை அறிவித்துள்ளது.

வெள்ளி மாலை பாங்கொக்கிலுள்ள வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்ட இம்மன்னரது உடல் நிலை சற்றுத் தேறி இருப்பதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.
thai king

சனிக்கிழமை காலை ஆன்டிபயோட்டிக் சிகிச்சை மூலம் இவரின் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாகவும் காய்ச்சல் நின்று விட்டதாகவும் மன்னரின் மருத்துவ குழு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 86 வயதாகும் மன்னர் புமிபோல் அடுலையாடேஜ் சக்ரி வம்சத்தின் உறுப்பினராவார். சக்ரி வம்சம் 18 ஆவது நூற்றாண்டில் இருந்து தாய்லாந்தின் முடிக்குரிய இராச்சியத்தை ஆண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் பிறந்து சுவிட்சர்லாந்தில் கல்வி கற்ற மன்னர் புமிபோல் தாய்லாந்தில் வறிய மாகாண விவசாயிகளில் இருந்து பணக்காரர் வரை அனைத்து சமூகத்தினரதும் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய முக்கிய நபராவார். 1946 இல் மகுடம் தரித்த இவர் இதுவரை 20 பிரதமர்கள், 17 இராணுவ ஆட்சி கவிழ்ப்புக்கள் மற்றும் 17 அரசியலமைப்பு சட்ட மாற்றங்களை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*