ஆலன் ஹென்னிங் தலை துண்டிப்பு விவகாரம் – ஐ.நா. கண்டனம்; ஐஎஸ்ஐஎஸ் எச்சரிக்கை

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

1412446950-7265

பிரிட்டனைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆலன் ஹென்னிங் தலை துண்டித்துக் கொல்லப்பட்டதற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆலன் ஹென்னிங் தலை துண்டிப்பு விவகாரம் – ஐ.நா. கண்டனம்; ஐஎஸ்ஐஎஸ் எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை இரவு 1 நிமிடம் 11 விநாடிகள் ஓடக்கூடிய ஒரு வீடியோ காட்சியை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் பிரிட்டனைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆலன் ஹென்னிங்கின் தலையைத் துண்டிப்பது போன்றும், அதில் அவர் “ஹாய், நான் ஆலன் ஹென்னிங்” என்று இறப்பதற்கு முன்பு கூறுவது போன்ற காட்சியையும் வெளியிட்டுள்ளது.

மேலும், “ நமது பாராளுமன்றம் இஸ்லாமிய நாடுகள் மீது தாக்குதல் நடத்துவது என்ற முடிவெடுத்துள்ளதால், நான் பிரிட்டிஷ் பொது உறுப்பினர் என்ற முறையில் இந்த முடிவிற்கான விலையை இப்பொழுது கொடுக்க வேண்டியுள்ளது” என்றும் கூறியுள்ளார்.

இதற்கு ஐ.நா. “கிளர்ச்சியாளர்களின் இந்தச் செயல் கொடூரமானமானது, கோழைத்தனமானது” என்று கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

ஆலன் ஹென்னிங் தலையைப் பிடித்தப்படி முகமூடி அணிந்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த ஒருவர், “ஒபாமா, நீங்கள் எங்களது மக்கள் வசிக்கும் பகுதிகளில் வான்வெளித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளீர்கள். இதற்காக நாங்கள், உங்களது மக்களின் கழுத்தை அறுக்கும் செயலை தொடர்கிறோம்” என்று கூறுவது போன்ற காட்சியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit