தலைவர் பிரபாகரன்: பன்முக ஆளுமை நூல் குறித்து “ஆளுமை நாயகன்” என்றத் தலைப்பில் உயிரெழுத்து இதழில் ஐயா கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் எழுதியக் கட்டுரை…

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

‘தலைவர் பிரபாகரன் பன்முக ஆளுமை’ என்னும் தலைப்புக் கொண்ட நூலை என்னிடம் தந்து, ஓவியர் புகழ் ஒரு மதிப்புரை எழுதிக் கொடுங்கள் என்று கேட்டபொது, முள்ளிவாய்க்கால் ஓரம் ஈர்த் தமிழரின் வீரமும், ஈகிய வன்மையும், வஞ்சகத்தால் பழிவாங்கப்பட்ட காலக்கட்டத்தில் நான் எழுதிய ‘என்னருமை ஈழமே’ என்கிற நூல் நினைவுக்கு வந்தது. ஓர் விடுதலைப் போரில் எவ்விதப் பங்கும் கொள்ளாத ஓர் எழுத்துக்காரனின் குறைந்த அளவிலான கடமை உணர்ச்சியின் வெளிப்பாடாகவே அதனை நான் கருதினேன். தமிழில் முதன்முதலாக வெளிவந்த காவியத் தன்மை வாய்ந்த ஒரு வரலாற்றுப் பதிவாக அந்நூலைக் கருதலாம்.

தலைவர் பிரபாகரன் பற்றித் தமிழில் சில நூல்கள் வெளி வந்திருக்கின்றன. எனினும், ஐயா பழ. நெடுமாறன் எழுதியுள்ள ‘பிரபாகரன்-தமிழர் எழுச்சியின் வடிவம்’ என்கிற நூல் விரிவாகவும் விளக்கமாகவும் அமைந்த – 1207 பக்கங்களைக் கொண்ட பெரு நூல், குறிப்பிடத்தக்க சிறப்பு வாய்ந்தது. அரசியல் தளத்தில் தொடர்ந்து இயங்கித் தமிழ்த் தேசியத்தைக் கட்டமைப்பதில் ஈடுபட்டு இடையறாது பணியாற்றிவரும் பழ. நெடுமாறன், தலைவர் பிரபாகரனின் உள்ளும் புறமும் தெரிந்து வெளிப்படுத்துவதொடு, வரலாற்று இயங்கியலில் வைத்து ஈழ விடுதலைப் போரைப் பார்த்துப் பதிவு செய்து வைத்திருக்கிறார். ஓவியர் புகழ் படைத்துள்ள நூலிலும் – தட்டையான வரலாற்று விவரங்களாக இல்லாமல் விடுதலைத் தத்துவ இழையோட்டத்தில் பிரபாகரனின் ஆற்றலும் ஆளுமையும் வெளிப்படுவதைக் காண முழகிறது.

ஓவியர் புகழின் ஓவியக் கலை நுட்பத்தையும் சிறப்பையும் – இரத்தப் பொழுதுகளில் விடியல் வேள்வி நடத்திக் கொண்டிருந்த பிரபாகரன் அறிந்து வைத்திருந்தார். “உங்கள் ஓவியங்கள் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு நவீனம் என்று சொல்ல முடியாது. எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய உருவங்களோடுதான் இருக்கின்றன. அதனால்தான் மக்களிடம் நல்ல வரவெற்பைப் பெற்றிருக்கின்றன. கதை, கவிதை போன்ற எந்தக் கலை வடிவத்தையும்விட, ஓவியம் மிக எளிதாகச் சென்றடையும். புரியாத அளவுக்குச் சிக்கலான ஓவியங்களும், நவீன ஓவியம் என்ற பெயரில் செய்கிறார்கள். அந்த வகையைச் சார்ந்ததல்ல உங்கள் ஓவியங்கள்” என்று பிரபாகரன் தெரிவிக்கும் கருத்துக்கள், புகழின் ஓவியத் தன்மையை மட்டும் புலப்படுத்தவில்லை; பிரபாகரன் ஏற்றுக் கொண்டிருந்த கலை இலக்கியக் கோட்பாட்டையும் புலப்படுத்துகின்றன.

ஓவியர் புகழ் தனித்துவம் வாய்ந்த தன்மையில், தன்னைக் கலை உலகில் நிறுவி வருபவர். 27 ஓவியங்களைக் கொண்ட ‘புயலின் நிறங்கள்’ கலைக்காட்சியும், புகை மூட்டம் கலைக் காட்சியும் – இக்கருத்துக்குச் சான்றுகளாக உள்ளன. வண்ணங்கள், வழவங்கள், கொடுகள், கற்பனைகள், கனவுகள் ஆகிய படிநிலைகளிலேயே நின்றுவிடாமல், தொடர்ந்து தன்னை மதிப்பீடு செய்து கொண்டும், மீள் உருவாக்கம் செய்து கொண்டும், ஓர் உயிர்ப்புள்ள கலை ஆற்றலாக இருந்து வருபவர் புகழ்.
கலைகளின் தாயாகக் கருதத்தக்க ஓவியத்தின் பன்முகப் பரிமாணங்களில் பயணம் செய்து, தான் கண்டறிந்து வரும் உண்மைகளை உலகிற்கு ஓயாமல் சொல்லிவரும் புகழ் – ஓவியத்திற்கு நிகரான எழுத்தாற்றலும் படைத்தவர் என்பதை எண்பித்து வருகிறார்.

பொதுவாக, ஓவியங்கள் பேசும் – ஓவியர்கள் பேசமாட்டார்கள். பேசும் ஆற்றலும் வாய்த்து விட்டால் என்னென்று சொல்வது? நாட்டை ஆள வல்லவன், மொழியையும் பாட்டையும் ஆள வல்லமை பெற்றுவிட்டால் – அது எப்படி இருக்கும்? அந்நிலையின் தகுதியும் தரமும் எப்படிப்பட்டது என்று சொல்ல வந்த தனிப்பாடல் புலவன் ஒருவன் – ‘மாணிக்கம் தித்திக்கில் என்னாகும் மற்றை மதுரங்களே’ என்பான். மாணிக்கம் – ஒளி மட்டும்தான் தரும். அது தித்திக்கவும் தொடங்கினால் வெறும் இனிப்பை மட்டுமெ கொண்டுள்ள மற்றப் பொருள்களுக்கு என்ன மதிப்புக் கிடைக்கும்? உண்மைதான்! – ஓவியரே ஒரு நல்ல எழுத்தாளருமாகிவிட்டால், அவருக்குக் கிடைக்கும் சிறப்பு – பெருமை எல்லாம், எழுத மட்டுமெ தெரிந்த ஒருவனுக்கு எப்படிக் கிடைக்கும்?
புகழின் எழுத்துத் திறனை, அவர் ஓவியங்கள் குறித்தும், ஓவியர்கள் குறித்தும் ஆக்கியளித்துள்ள நூல்கள் வழியாக நான் அறிவேன். பாட நூல் அளவில் பயன்படுவனவும் – ஆய்வு நூல் என்னும் பார்வையில் பயன் தருவனவும் – பொதுப் படிப்புக்குத் தக்கவை என்றும் தரத்தனவும் அவரிடமிருந்து தமிழுக்குக் கிடைத்துள்ளன.

tamilanpan-1024x800

சந்தைக்குச் சரக்குத் தயாரிப்பதிலேயே சில கலைஞர்கள் வாழ்வு முடிந்து போய்விடும். தன் கலையை முடிவு செய்யும் உரிமையைச் சந்தையிடம் கொடுத்துவிட உண்மைக் கலைஞன் ஒப்ப மாட்டான். ஆயின் சமரச நிலையில் தன் கலை உரிமையைத் தக்க வைத்துக் கொள்ளவும் – தனது வாழ்க்கைப் போராட்டத்திற்குப் பதில் சொல்லவும் கலைஞன் தவிப்பதை – உலகெங்கும் நாம் காண முடியும். போராட்ட மயமான வாழ்க்கையில் வெற்றி கண்டு, தம் கலையை மக்களுக்குத் தந்து செல்பவர்களே காலம்தோறும் போற்றப்படுவார்கள். மானுட அக்கறையில்லாத கலையுடனோ – மட்டமான தரத்துக்குத் தாளம் போடும் கலையுடனோ – உறவு கொள்ளாத மனத் துணிவு – ஒரு கலைஞனுக்குத் தேவை. ஓவியர் புகழ் அத்தகைய துணிவு படைத்த கலைஞர்களில் ஒருவர்.

இந்தியாவில் பல நகரங்களிலும், அயல் நாடுகள் பலவற்றிலும் ஓவியக் காட்சிகளை நடத்தி வெற்றி கண்ட புகழ் – தனக்கென வகுத்துக் கொண்ட குறிக்கொள் வழி இயங்கி வருபவர். எங்குச் சென்றாலும், என்ன ஓவியம் வரைந்தாலும், ‘கலை, கலைக்காக’ என்கிற கோட்பாட்டிற்கு ஆளாகாமல் ‘கலை மக்களுக்காகவே’ என்னும் கோட்பாட்டில் வெரூன்றி நின்று பணி செய்வதை, ஒளி படைத்த கலை உள்ளம் கொண்டவர்கள் மதித்தே பேசுவர்.

பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்மிகு பாவலன் ஜான்டன் ‘உள்ளுணர்வியல்’ நெறிக் கவிதை இயக்கத்தின் முன்னோகளில் ஒருவன். அவன் எழுதுவான் – எந்த ஒரு மனிதனுடைய மரணமும் என்னை ஒடுக்கி விடுகிறது. ஏனெனில் மானுடத்தின் ஒரு கூறாக இருப்பவன் நான். எனவே சொல்கிறேன், சாவுமணி யாருக்காக அடிக்கப்படுகிறது என்பதைப் பார்த்து வர யாரையும் அனுப்பாதே. அது உனக்காக அடிக்கப்படுவதாக இருக்கலாம். இச்சொற்களின் அழுத்தம் மனிதனின் மரணத்தை முதன்மைப்படுத்தவில்லை; வாழ்வை முதன்மைப்படுத்துகிறது. எனவேதான் எமிங்வே என்ற புகழ் பெற்ற புதினப் படைப்பாளியிடத்தும் தாக்கத்தை ஏற்படுத்தித் தனது புதினம் ஒன்றுக்கு ‘யாருக்காகச் சாவுமணி அடிக்கப்படுகிறது’ என்பதையே ஒரு சுருக்க வாசகமாக வைக்கத் தூண்டியிருக்கிறது. இத்தகைய உள்ளம், மானுடப் பரிவு மிக்க கலைஞனை- எல்லை கடந்தவனாக இயங்க வைக்கிறது.

சமூகம் அழுதால், கலையும் அழும்; சமூகம் புன்முறுவலித்து மலர்ந்தால், கலையும் அவ்வண்ணமே மலரும். ஆயின் செயல்படு கருணை உள்ளத்தின் கலை, மனிதன் அழுதால் அவன் அழுகையைப் போக்கி, ஆறுதல் சேர்க்கும். அழுகைக்குக் காரணமான அவலத்தை வெல்லக் கைகளில் கருவிகளைக் கொடுக்கும். மனிதன் சிரித்தால் – கலை தானும் மகிழ்வோடு வெளிப்படும் என்பதோடு, சிந்திக்க வைக்கும். அத்துடன் சிரிப்பை, மகிழ்வை மானுடப் பொதுமையாக்க உந்துதல் தரும்; ஊக்கம் கொடுக்கும். ஓவியர் புகழ், கலையின் அழகியலும் செயற்பாடும் என்னவென்று புரிந்தவர். தன் கருத்துக்களை ஓவிய வழியாக மட்டுமன்றி எழுத்துக்கள் வடிவிலும் வழங்கும் தேர்ச்சி பெற்றவர்.

velupillaiprabhakaran-kathiravan

ஈழப்போர் பற்றியும் – தலைவர் பிரபாகரன் பற்றியும் சிந்திக்கவோ எழுதவோ புகழ் முற்பட்டதற்கு, அவருடைய இக்குறிப்பிட்ட எல்லைப் பரப்பிலான அக்கறையும் கவலையும் மட்டும் காரணம் இல்லை. உலக வரலாற்று அறிவு, உலகப் புரட்சிகளின் முதற்பொருள், கருப்பொருள், உரிப் பொருள் ஆகியன பற்றிய கண்ணோட்டம் ஆகியன ஏற்கெனவே ஓவியர் புகழ்பால் பொருந்தியிருந்திருக்கின்றன.

“உலக அளவில், பாலஸ்தீன விடுதலைப் போராட்டம், தென்னாப்பிரிக்க விடுதலைப் போராட்டம், குர்தீஸ் இனப்போராட்டம் என்று பல விடுதலைப் போராட்டங்களை உள்வாங்கியிருக்கிறேன். ரசியப் புரட்சி, சீனப் புரட்சி, கியூபப் புரட்சி குறித்து நான் படித்திருக்கிறேன். அந்தந்தப் போராட்டக் களங்கள் குறித்து நிறைய அறிந்திருக்கிறேன். இந்த அனைத்து விடுதலைப் போராட்டத்திற்கும் இருந்த நியாயங்கள் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கும் இருந்தன” என்று புகழ் கொடுக்கும் வாக்குமூலமே, இந்நூலை ஆக்குவது குறித்த தகுதிப்பாடு அவருக்கு உண்டு என்பதை நமக்கு உணர்த்துகிறது.

ஈழ அமைப்பு ஒரு வடிவங்கொண்டு செயல்பட்டுக் கொண்ழருந்த காலக்கட்டத்தில் ஒன்பது முறை அங்குச் சென்று வந்ததோடு, தலைவர் பிரபாகரனோடு பல நெரடிச் சந்திப்புக்களைப் பெற்றவர் புகழ். குடும்பத்தோடு சென்று தலைவர் பிரபாகரன் குடும்பத்தொடு பழகுகிற அரிய வாய்ப்பும் புகழுக்குக் கிடைத்திருக்கிறது. இந்நூலின் முகப்புப் படத்தில் இருபதாம் – இருபத்தொன்றாம் நூற்றாண்டுத் தலைமைத் தமிழன் பிரபாகரன் – ஓவியர் புகழின் மைந்தன் இலக்கியனைத் தூக்கி வைத்துக் கொஞ்சி மகிழ்வதைக் காணலாம். இத்தகைய பாசப் பரிசைப் பெற்ற இன்னொரு குர்ந்தை பழ. நெடுமாறன் ஐயாவின் மகள் உமா என்பதையும் இங்குக் குறிக்க விரும்புகிறேன்.
தலைவர் பிரபாகரனின் பன்முக ஆளுமைகளில் ஒன்று இத்தகைய பாசப் பொழிவு; பரிவுப் பெருக்கம். நெஞ்சில் கருணை படைத்தவன்தான் புரட்சியாளனாக மாறுவான். அவர்களில் சிலர் ஆயுதம் ஏந்துவர்; சிலர் காகிதம் ஏந்துவர். குழந்தை இலக்கியனிடம் அவர் கொண்ட பாசப் பிணைப்பை – அங்குச் செஞ்சொலைக் குழந்தைகளிடம் பிரபாகரன் காட்டியுள்ளார். காந்தரூபன் அறிவுச் சோலைக் குழந்தைகளிடம் காட்டியுள்ளார்.

பிரபாகரன் என்றால் அவர் தீவிரவாதி, பயங்கரவாதி, போராளி, ஈவுஇரக்கமற்ற கொலையாளி, இரத்த வெறி பிடித்து அலைபவர். சமரசத்தையும், சமாதானத்தையும், சன்மார்க்கத்தையும் மறுப்பவர்; கல்நெஞ்சம் படைத்தவர் – இட்லர், முசொலினி வகையறாக்களின் வழி வந்தவர் என்றெல்லாம், கொடுமை வடிவங்களில் படைத்துக் காட்டப்பட்டது உண்டு. ஓவியர் புகழின் இந்த நூலைப் படித்துப் பார்த்தால் – பிரபாகரன் எப்படிப்பட்ட மானுட நேயர், அறிஞர் பெருமகன், அரசியல் வல்லுநர், ஆட்சித் திறன் படைத்தவர், கலை இலக்கியச் சிந்தனையாளர் என்பது புரியும். அவருடைய சமூகச் சிந்தனைகள் – கல்விச் சிந்தனைகள், கலை இலக்கிய மதிப்பீடுகள் – எல்லாவற்றையும் புகழ் அழகுறப் பதிவு செய்திருக்கிறார் இந்த நூலில்.

அவருடைய போராட்ட நெறிமுறைகள் – உத்திகள், நுட்பங்கள், வீரம் செறிந்த அணுகுமுறைகள் எல்லாம் எப்படிச் சிறப்பானவையோ – அப்படிச் சிறப்பானவை குழந்தைகள், பெண்களுக்கான பாதுகாப்பு, கல்வி, உணவு, உடல் நலம் குறித்த ஏற்பாடுகளும். தெருக்கள், ஊர்கள், சாலை இணைப்புகள் பற்றிய சிந்தனைகளும் ஏற்பாடுகளும். பிரபாகரனை – அவர் இடுப்பில் வைத்திருக்கும் துப்பாக்கிக்கு உள்ளேயோ தோட்டாக்களுக்குள்ளெயோ ஒடுக்குவதும், சுருக்குவதும் – சமன்மையற்ற சரித்திரக்காரரின் சதிவேலையாக மட்டுமே இருக்கும்.

இந்நூலில் ஓவியர் புகழ் இரு கோணங்களில் தனது கருத்தோட்டங்களைக் கொண்டு வந்து கொட்டியுள்ளார். முதல் 120 பக்கங்களில் ஈழத் தமிழ்க் குடியரசு பற்றிய அரிய செய்திகளைப் பதிவு செய்துள்ளார். 121ஆம் பக்கம் முதல் நூல் முடிநிலை வரை தலைவர் பிரபாகரன் அவர்களைப் பார்த்துப் பழகி அறிந்த வியத்தகு அனுபவங்களை – கோதில்லாத் தமிழில் கோத்துக் கொடுத்துள்ளார். ஒரு வகையில் முற்பகுதி – ‘புறம்’ என்றால், பிற்பகுதி ‘அகம்’ என்று சொல்லலாம். தமிழ் ஈழத்தின் உள்கட்டமைப்புகளை நூலின் நிறைவுப் பகுதியில் புகழ் தொகுத்துக் கொடுத்துள்ளார்.

தமிழ் ஈழ வைப்பகம் தொடங்கி, மாமனிதர்கள் விருது ஈறாக, 110 உள்கட்டமைப்புகள், தரைப்படையில் – இம்ரான் பாண்டியன் படை அணி முதல் மாவீரர் பணிமனை வரை 50 பிரிவுகள், காவல்துறையில் தமிழ் ஈழக் காவல் துறை, குற்றத் தடுப்புக் காவல் துறை, குற்றப் புலனாய்வு உட்பிரிவு என்னும் முப்பிரிவுகள் எனப் பலவற்றையும் புகழ் பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறார். இவற்றுள் சிலவற்றைப் பற்றி ஓரளவு அறிமுக நிலையில் நூலின் முற்பகுதியில் விளக்கியிருக்கிறார், புகழ். அப்பகுதியில்கூட, பிரபாகரனின் ஆளுமைச் சிறப்புகள் வெளிப்பட்டு இருக்கின்றன.

எடுத்துக்காட்டாக, தன் கையில் கட்டிக் கொள்ள மணிப்பொறி இல்லையே என்று மனம் குன்றி நின்ற மாணவனுக்கு, உடனெ, தன் கையில் இருந்த மணிப் பொறியை எடுத்துக் கட்டிவிடுகிறார் பிரபாகரன். அப்போது ‘வேண்டாம், வேண்டாம்’ என்று பதறுகின்ற அவனிடம், “பயப்படாதே, அதைக் கட்டிக் கொள்; இப்படி எத்தனையோ இருக்கின்றன” என்று சொல்லி அவனைத் தாயுள்ளதோடு தழுவிக்கொண்ட நிகழ்வைச் சொல்லலாம்.

இன்டினாரு நிகழ்வாக, தன்னை மூன்றாண்டுகளாகக் காதலித்துப் பழகிய கரும்புலிப் போராளி மணந்து கொள்ளாமல் போனதைக் கடிதமாக எழுதிய ஒரு பெண்ணுக்கு – அவள் விருப்பப்படி திருமணத்தைப் பிரபாகரன் நடத்தி வைத்ததைச் சுட்டிக் காட்டலாம்.

இதைச் சுட்டிக்காட்டும் புகழ் – தனக்கு இச்செய்தியைக் கூறிய பரமு-மூர்த்தி என்பவர், ‘தலைவர் போரை மட்டும் நடத்தவில்ல்; மக்களையும் சரியாக வழி நடாத்தியதோடு, மக்களின் துன்பங்களையும் இயலுமானவரை தீர்த்துவைத்தார்’ என்று மனம் நெகிழ்ந்து சொன்னதையும் பதிவு செய்திருக்கிறார்.
புறம்போல அமைந்துள்ள இப்பகுதி, பிரபாகரனின் அரசியல், சமுதாய உணர்வுகளையும் – ஆட்சியமைப்பு நடைமுறைகள் குறித்த தெளிவான பார்வைகளையும் விளக்குகிறது. கனவாய்க் கலைந்துபொன தமிழ் ஈழத்தில், நிதி நிர்வாகத் துறை, சட்ட வகைமை முறைமைகள், காவல்துறையின் ஒழுங்கமைவுக்கு உள்ளான பணிகள், தமிழ் ஈழக் கடற்படை, தமிழ் ஈழ விளையாட்டுத் துறை, கல்வித் துறை,கலைத் துறை, தமிழ் ஈழ வைப்பகம் என்று பலவற்றையும் அவர் கட்டமைத்த திறம் – கண்காணித்த உரம், எல்லாவற்றையும் புகழ், நிரல்படத் தொகுத்துக் கூறியுள்ளார்.

‘தமிழினத்திற்கு முகமாக மட்டுமல்லாமல், முகவரியாகவும் தலைவர் பிரபாகரன் இருக்கின்றார். அவரிடம் இருக்கின்ற பன்முக ஆற்றல்களைத் தமிழர்கள் முதலில் புரிந்துகொள்ள வெண்டும்’ என்று குறிப்பிடும் ஓவியர் புகழ், பிரபாகரனின் உள்ளக்கிடக்கை என்னவென்பதையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. திரைப்படக் கதாநாயகனைப்போலத் தன்னை அணுகுவதை, தனக்கு இரசிகர்களாகத் தமிழர்கள் இருப்பதை அவர் ஒருபோதும் விரும்பவில்லை. தான் முன்னெடுத்துள்ள போராட்டத்தையே அவர் முதன்மைப்படுத்தினார். இதற்கான வலுச் சேர்க்கவே அவர் தமிழர்களை அழைத்தார். ஒருபோதும் தன்னையும் தனது தலைமையையும் கொண்டாட யாரையும் அவர் திரட்ட முன் வரவில்லை. ‘இப்போராட்டத்தை இளையோர் கையில் ஒப்படைக்கிறேன்’ என்று கூறியதற்கும் காரணம், இதுதான்.
உண்மை வரலாற்றின் ஓரத்தில் நின்றுவிட அதனைக் காணாதவர்கள், இரத்த வெறியராய், பயங்கரவாதியாய்ப் பிரபாகரனின் பிம்பத்தைக் கட்டமைத்து, ஒரு விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குகிற நசுக்குகிற வல்லாண்மைக்கு ஆதரவாளர்களாகி – என்ன முறையாண்மை என்று தெரியாமலே, அரசு இறையாண்மை பற்றிப் பிதற்றித் திரிந்தனர்.

இந்நூலின் ‘அகம்’போல அமைந்த பிற்பகுதியில்தான் பிரபாகரன் உடனான புகழின் நெரடித் தொடர்பு பற்றிய செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன. புகழ் பெற்றபேறு போற்றத்தக்கது. தமிழுக்கும் தமிழ்க் கலைக்கும் கிடைத்த அரிய வாய்ப்பு என்று அதனை வருணித்தாலும்பொருந்தும் என்று எண்ணுகிறேன். இவ்விடத்தில், கவிஞர் இன்குலாப், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் ஆகியோர் பெற்ற ஈழ அனுபவங்களையும் நான் நினைத்துக் கொள்கிறேன்.

‘தலைவரோடு சந்திப்பு’ என்னும் தலைப்பில் உள்ள கட்டுரை – தலைவர் பிரபாகரனோடு புகழ் நிகழ்த்திய உரையாடல்கள் வழி வெளிப்பட்ட உலகப் புரட்சிகள் – போராட்டங்கள் பற்றிய கருத்துக்களை வரலாற்றுப் பார்வையோடு முன் வைக்கிறது. சதாம் உசேன் பற்றியும், கியூபாப் புரட்சி பற்றியும் மட்டும் அல்லாமல், சிங்களவர்கள் கைப்பாவையாகிவிட்ட கருணா பற்றிய, பிரபாகரனின் வார்த்தை வார்ப்படமும் இடம் பெற்றுள்ளது – புகழின் ‘உறங்கா நிறங்கள்’ என்னும் ஓவிய நூல். இவ்வுரையாடலின் பின்னணியாக இருப்பதையும், ஓவியக்கலை குறித்த பிரபாகரனின் கருத்தோட்டத்தையும் – அக்கறையையும் இப்பகுதியில் காண முழகிறது, போராளிகளுக்கு ஓவியப் பயிற்சி தர முடிவு செய்யப்பட்டு – புகழ் அப்பணியை மகிழ்வுடனும் பெருமையுடனும் ஏற்க, ஏற்பாடாவதையும் இப்பகுதியில் பார்த்து நாமும் தலைநிமிர்கிறோம்.

“ஓவியம்தான் எல்லாவற்றுக்கும் அடிப்பட்டை; எல்லாத் துறைக்கும் ஓவிய அறிவு தேவைப்படுகிறது” என்று கூறும் பிரபாகரன், லியார்னாடோ டாவின்சிக்குக் கீறத்தெரிந்திருந்தது. அது கெலியை (Helicoptors) வடிவமைத்து – அதன் உருவாக்கத்திற்குத் துணை புரிந்தது என்று சொல்லி, முத்தாய்ப்பாக, அறிவியல் அறிஞரான லியார்னாடோ டாவின்சி கண்டுபிடிப்பிற்கு ஓவியரான லியார்னாடோ டாவின்சி துணை புரிந்திருக்கிறார் என்று நயம்படவும் திறம்படவும் முடித்து வைக்கிறார். தலைவர் பிரபாகரனை எப்படி வியக்காமல் இருக்க முழயும்! துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு வேட்டையாடுவதே வேலையாக இருந்த ஆள் என்று எப்படி அவரைச் சொல்ல முடியும்? சொன்னால் – அப்படிச் சொல்பவனை அறிவுள்ளவன் என்று எப்படிச் சொல்ல முடியும்?

ஓவியர் புகழின் ‘புயலின் நிறங்கள்’ என்னும் நூலை ஆர்வத்தோடு பிரபாகரன் கிளிநொச்சியில் வெளியிட ஏற்பாடு செய்ததையும், ஓவியக் காட்சிகள் நடத்தப்பட்டதையும் – இந்நூல் பதிவு செய்துள்ளது. தலைவர் பிரபாகரன் – ஈழத் தமிழர்கள், அச்சுக் கலையிலும் திரைப்படக் கலையிலும் வளர வேண்டும் என்ற ஆசையோடும் அக்கறையோடும் முயன்றதையும் இந்நூல் வழியாகக் காண்கிறோம். ஈழத் தமிழரின் ‘ஆணிவேர்’ – படத் தயாரிப்பில் இசையமைப்பிற்கு இளையராசாவைப் புகழ் – நடிகர் மணிவண்ணனோடு அணுகியதையும், ஈழத் தமிழர் பற்றி, இளையராசா தன் இரக்க உணர்வை வெளிப்படுத்தியதையும், இளையராசா ‘ஆணிவேர்’ படத்திற்கு இசையமைப்பது என்னும் வேட்கை கைகூடாமற் போனதையும் – திரைப்பட இயக்குநர் மகேந்திரன் – ‘ஆணிவேர்’ படத் தயாரிப்புக்கு உதவவும், ஈழத்துத் தொழில்நுட்பவியலாருக்கு வழிகாட்ட ஆர்வம் கொண்டதையும் பதிவு செய்யும் இந்நூல், பிரபாகரன் பற்றிய பல சாளரங்களையும் திறந்து வைக்கிறது.

ஓவியர் புகழ் எவ்வளவோ பரிசுகளைப் பெற்றிருக்கலாம். விருதுகள் அவர் கரங்களில் குவிந்திருக்கலாம். ஆனால், புன்னகை ஒரு தருணம்; கண்ணீர் மறு தருணம் என்னும் நிலையில், ஈழத் தமிழர்களை ஏறத்தாழ விடுவித்துவிட்ட தலைவர் பிரபாகரனின் ‘புலி உலகம்’ வழங்கிய விருதுக்கு நிகராக – இனி ஒன்றை அவர் பெற முடியாதென்றே நான் கருதுகிறேன். வட்ட வடிவிலான தங்கப் பதக்கம்; ஒரு பக்கம் புலிச் சின்னம் – மறுபக்கம் தமிழ் ஈழ வரைபடம். பதக்கம் – புகழுக்குச் சொந்தம்; புலிச் சின்னமும், தமிழ் ஈழ வரைபடமும் உணர்வுள்ள உலகத் தமிழர்களுக்கெல்லாம் சொந்தம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*