செவ்வாய் கிரகத்துக்கு மனிதன் அனுப்பப்படுவார் இஸ்ரோ விஞ்ஞானி தகவல்!!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

marsmoss1

செவ்வாய் கிரகத்திற்கு விரைவில் மனிதனை அனுப்பி ஆய்வு செய்ய திட்டப் பணிகள் நடந்து வருகின்றன என நெல்லையில் இஸ்ரோ விஞ்ஞானி தெரிவித்தார்.

நெல்லை அறிவியல் உலக விண்வெளி வார விழா நேற்று தொடங்கியது. இதில் கலந்து கொண்ட மகேந்திரகிரி விஞ்ஞானி கண்ணு பேசியதாவது: ‘‘விண்வெளி வார விழா நிகழ்ச்சியில் இஸ்ரோ சார்பில் சிறப்பு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

இதில் இந்தியா படைத்துள்ள விண்வெளி சாதனைகளில் இஸ்ரோவின் பங்கான எஸ்எல்வி-3, ஏஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி, பிஎஸ்எல்வி, சந்திராயன்-1 ஆகியவைகளின் பயன்கள் மற்றும் மாதிரி வடிவங்கள் விகாஸ் இன்ஜின், கிரையோஜெனிக், அப்பர் ஸ்டேஷ் இன்ஜின் ஆகியவைகளின் மாதிரிகளும் அமைக்கப்பட்டு அதன் விளக்கங்களும் இடம் பெற்றன.

மங்கள்யான் வெற்றியைத் தொடர்ந்து செவ்வாய் கிரகத்தில் மனிதனை நேரடியாக அனுப்பி ஆய்வு செய்வதற்கான திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறன. மங்கள்யான் வெற்றி உலக அளவில் இந்தியாவிற்கு பெருமையை தேடித் தந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit