சர்வதேசத்தை ஏமாற்ற தொடங்கியுள்ள சிறிலங்கா!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சர்வதேசத்தை ஏமாற்ற தொடங்கியுள்ள சிறிலங்கா!

 

ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்

கடந்த ஓரு வருடமாக, சர்வதேச அரசியல் மைதானமாக மாறியுள்ள சிறிலங்காவில்சீனா, ஜப்பான், இந்தியா, பாகிஸ்தான், ஈரான், ராஸ்யா, பிரித்தானியா, ஐரோப்பிய யூனியன் நாடுகள்,அமெரிக்கா போன்றவை தங்களது பயிற்சிகள், போட்டிகளை நடாத்துகின்றனர். இவற்றில் இரண்டு மூன்று நாடுகள் தவிர்ந்த மற்றைய நாடுகள் யாவும், சிறிலங்காவின் ஆட்சி மாற்றத்தில்முக்கிய பங்கு வகித்தவர்கள்.

 

ஆட்சி மாற்றத்தின் விளைவுகளையும் அனுகூலங்களையும், சில நாடுகள் நன்றாக அனுபவிக்கின்றன. துர்அதிஸ்டவசமாக, ஆட்சி மாற்றத்தின் முக்கிய பங்களியென, முன்னாள் ஜனதிபதிராஜபக்சாவினால் குற்றம் சாட்டப்பட்ட அண்மை நாடான இந்தியாவை, ஆட்சி மாற்றம் திருப்தி அளித்துள்ளதாக காணப்படவில்லை. தாம் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு பற்றிகதைப்பதினாலேயே சிறிலங்கா தங்களை எட்ட வைப்பதாக எண்ணிய இந்தியா, புதிய அரசுடன் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு பற்றி கதைப்பதையும் நிறுத்தி பார்த்தார்கள், ஆனால் சிறிலங்காசீனாவையும், இந்தியாவையும் சரி சமானகவே பார்க்க விரும்புகிறார்கள்.

 

பலவிதப்பட்ட காரணங்களுக்காக, சிறிலங்காவில் எந்த அரசாங்கம் பதவியிலிருந்தாலும், சீனாவை ஒரு பொழுதும் எட்ட வைக்க மாட்டார்கள். சுருக்கமாக கூறுவதனால், வேறுபட்டகாரணங்களிற்காக, சிறிலங்கா ஒரு பொழுதும் இந்தியாவை முழு மனதாக நம்ப போவதில்லை. இவற்றை இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் நன்றாக அறிந்திருந்த பொழுதும்,சிறிலங்காவுடன் ஓர் மௌனமான ராஜதந்திரத்தை கடைப்பிடிக்கிறார்கள் என்பதே உண்மை.

 

பொருளதாராமாக இருந்தலென்னா, மனித உரிமையாக இருந்தலென்னா, இறுதியில் யாவும் அரசியலே. இவ் அடிப்படையில், அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய யூனியன் நாடுகள்,சிறிலங்காவின் புதிய அரசின் நலனிற்கு ஏற்ப, தேவையானவற்றை கொடுத்து, தமக்கு தேவையானவற்றை பெற்றுக் கொள்கிறார்கள். இந்தியா சிறிலங்காவில் ஓர் பாரீய பங்கை எதிர்பார்ப்பதாககுறை சொல்லப்படுகிறது.

 

சிறிலங்காவின் இன பிரச்சனை என்பது, 1948ம் ஆண்டு சுதந்திரத்தை தொடர்ந்து கொழுந்து விட்டு எரிகிறது. ஆனால் தமிழ் மக்களுடைய அரசியல் பொருளாதார சர்ச்சைகள், குறைகளை, 1983யூலை மாதம் வரை சர்வதேச சமூதாயம் அறிந்திருக்கவில்லை. தொடர்ச்சியாக பல தடவைகள் (1956, 1958, 1977, 1981, யூலை 1983), சிங்கள கிளர்ச்சியாளர்களினால் தமிழ் மக்கள் தாக்கப்பட்டுஅவர்களது உடமைகள் நாசமாக்கப்பட்ட பொழுதிலும், 1983ம் யூலை மாதம் நடைபெற்ற கலவரத்தின் பின்னரே, தமிழ் மக்கள் இலங்கை தீவில் இரத்த வெள்ளத்தில் பல தசாப்தங்களாகமிதப்பதை  சர்வதேச சமூதாயம் அறிந்து கொண்டனர்.

sl sril

 

பிரித்தானியா தவிர்ந்த வேறு எந்த ஒரு நாடும், சிங்களத் தலைவர்களினால் கீழித்து எறியப்பட்ட, 1956ம் ஆண்டு பண்டாசெல்வா ஒப்பந்தம் பற்றியோ அல்லது 1965ம் ஆண்டு டட்லிசெல்வாஒப்பந்தம் பற்றியோ அறிந்திருக்கவில்லை. இவ்விரு ஒப்பந்தங்களும், வடக்கு கிழக்கில் வாழும் மக்களிற்கு அரசியல் பரவலாக்கலின் அடிப்படையில், சாமஸ்டியை போன்ற ஓர் அடிப்படைதீர்வு காணப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

 

தெற்கில் அரசியல் கட்சிகளும், பௌத்த துறவிகளும் இவ் ஒப்பந்தங்களை எதிர்த்த காரணங்களினால் இவை கைவிடப்பட்டன என்பது சரித்திரம்.

இலங்கை இந்தியா ஒப்பந்தம்

 

இவ்விரு ஒப்பந்தங்களின் தோல்விகளின் தொடர்ந்தும், வேறுபட்ட ஒப்பந்தங்கள், வேறுபட்ட நபர்களுடன் கைச்சாத்திடப்பட்டு, இவையும் பெரும் ஏமாற்றத்திலேயே முடிந்தன. இவற்றிற்குநல்லதோர் ஊதரணமாக 1987ம் ஆண்டு கைச்சாத்தான இலங்கை இந்தியா ஒப்பந்தம் காணப்படுகிறது. இவ் ஒப்பத்தத்தின் அடிப்படையிலேயே 13ம் திருத்த சட்டமும் அதனுடனானமாகாணசபைகளும் உருவாக்கப்பட்டன.

 

ஆனால் இன்று மூன்று தசாப்தங்களாகியும், 1987ம் ஆண்டு கைச்சாத்தான இலங்கை இந்தியா ஒப்பந்தம் முழு அளவில் நடைமுறை படுத்தப்படாதுள்ளது. பதவியிலிருந்து வந்த ஒவ்வொருசிறிலங்கா அரசுகளும், இலங்கை இந்தியா ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தாமல் தவிர்ப்பதற்கான காரணத்தை கண்டு பிடிப்பதிலேயே இன்று வரை கண்ணும் கருத்துமாகவுள்ளனர்.

 

கடந்த மே மாதம் 19வது திருத்தச் சட்டம் பற்றி என்னால் எழுதப்பட்ட கட்டுரையில், கீழ் வருமாறு கூறியிருந்தேன்.

 

13வது திருத்தச் சட்டம் சிறிலங்காவின் அரசியல் யாப்பில் 1987ம் இணைக்கப்பட்டுள்ள போதிலும், இன்றுவரை இத்திருத்தச் சட்டம் முற்று முழுதாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதைமுற்று முழுதாக நடைமுறைபடுத்துவதற்கு பாரளுமன்றத்தில் எந்த வாக்கெடுப்பை யாரும் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. இது பற்றி தற்போதைய அரசோ, ஜனதிபதியோ அக்கறைகொண்டது  கிடையாது. இந்நிலையில், தற்போதைய அரசின் பங்காளியான, சிங்கள மொழிச் சட்டத்தை வெற்றியாக அமூல்படுத்தி, அன்று தமிழ் மக்களின் அரசியல் தீர்வாக சமஷடி அரசேஇருக்க முடியுமென ஆசைவார்த்தை கூறிவந்த எஸ் டபிள்யூ ஆர் டி பண்டரநாயக்கவின் மகளாகியஇ முன்னாள் ஜனதிபதி, இப்பொழுது சமஷடி அரசு என்ற ஆசை வார்த்தையை மீண்டும்ஆரம்பித்துள்ளதன் நோக்கம் என்ன

 

இன்று 19வது திருத்தச் சட்டம் அமூல்படுத்தியது போல், முன்னாள் ஜனதிபதி சந்திரிக்காவினால் கூறப்படும், சமஷடி அரசை உருவாக்குவதற்கான அரசியல் யாப்பில் மற்றங்களை இவர்களால்வெற்றிகரமாக நிறைவேற்ற முடியுமா? இவ் சமஷடி அரசு பற்றிய விடயங்கள் யாவும், நான்கு ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர், சிங்கள அரசியல்வாதிகளால் நிரகரிக்கப்பட்டுள்ளது. இப்படியானநிலையில், இதை கூறுபவர்களினால் எப்படியாக  சமஷடி அரகை உருவாக்க முடியும்?

 

ஆனால் 13வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில்இ இதை முற்று முழுதாக அமூல் படுத்துவதே தற்பொழுது மிக முக்கியம். இதை 19வது திருத்த சட்டத்தை நிறைவேற்ற இணைந்த அரசும்,எதிர்கட்சிகளும் இணைந்து நடைமுறைப்படுத்த முடியும். இதை இவர்களால் இப்பொழுது செய்வதில் என்ன தடைகள் உண்டு?”

 

இன்றைய கால பகுதியில் வெளிவரும் உள்நாட்டு வெளிநாட்டு ஊடக செய்திகளிற்கு அமைய, சிறிலங்காவில் பொறுப்பு கூறுதல், இன பிரச்சனைக்கான தீர்வு போன்ற விடயங்களில் எந்தவிதஆக்க பூர்வமான சைகைகளும் நடைமுறைகளும் உள்ளதாக தெரியவில்லை. தற்பொழுது சிறிலங்காவினால் கூறப்படுபவை, செய்யப்படுபவை யாவும் சர்வதேசத்தைஏமாற்றுவதற்கானவையே.

 

எதிர்த்த பிரேரணையை ஆதரித்தார்கள்

 

கடந்த செப்டம்பர் மாதம், .நா.மனித உரிமை சபையின் 30வது கூட்டத் தொடரில் சிறிலங்கா மீது கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு சிறிலங்காவும் இணைந்து அவ் பிரேரணையைமுன்மொழிந்தார்கள். இதன் உண்மை என்னவெனில், இதே பிரேரணை உரையாடலுக்கு வந்த வேளையில், சிறிலங்காவின் பிரதிநிதிகள் இதை ஏற்க மறுத்து, அவற்றை மாற்றி அமைக்குமாறுவேண்டி நின்றார்கள். ஆனால் யாவரும் வியக்கும் வகையில், சரியாக இரண்டு நாட்களின் பின்னர் தாம் நிராகரித்த அதே பிரேரணையை தாமும் இணைந்து முன்மொழிவதாக சிறிலங்காவின்பிரதிநிதிகள் சபையில் கூறினார்கள். இவை கபடங்கள் அடங்கிய செயற்பாடுகள் என்பதை நாம் அன்றே அறிந்திருந்தோம். இவற்றின் பிரதிபலிப்புகளை இன்று காண்கிறோம்.

 

ஒரு பக்கம் ஜனதிபதி, மறுபக்கம் சிறிலங்காவின் அமைச்சரவை பேச்சாளர் ஆகியோர் ஜெனிவா தீர்மானத்திற்கு எதிர்மாறான கருத்துக்களை ஒழிப்பு மறைப்பு இன்றி வெளிப்படையாகதீர்மானத்தில் கூறியவற்றை சிறிலங்கா நடைமுறை படுத்தாது என கூறுகிறார்கள். ஆனால் பிரதம மந்திரி ரணில் விக்கிரமாசிங்கா தமது அரசு அப்படி கூறவில்லையென முழு பூசானிகாயைசோற்றில் புதைக்கிறார். இதேவேளை வெளிநாட்டு அமைச்சர் ஊடகங்களிடமிருந்து ஒளித்து மறைந்து மாஜா ஜாலா மனிதனாக காட்சியளிக்கிறார்.

 

சிறிலங்காவில் தெற்கில் உள்ள சிவில் சமூகத்தை சார்ந்த கபடங்கள் நிறைந்த அங்கத்தவர்கள், தற்போதைய அரசிற்கு சார்பாக பல வேலை திட்டங்களை மேற் கொள்வதனால், தற்போதையஅரசும் சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கு இலகுவாகவுள்ளது.

 

முன்னை சிறிலங்கா அரசிற்கும், தற்போதைய அரசிற்கும், பொறுப்பு கூறுதல் விடயத்தில் பாரீய வித்தியசங்கள் கிடையாது. முன்னைய அரசு சர்வதேச நாடுகளை பகைத்தது. ஆனால்தற்போதைய அரசு, தெற்கில் உள்ள சிவில் சமூகத்தின் உதவியுடன், சர்வதேச நாடுகளை கபடமான முறைகளை பாவித்து ஏமாற்றுகிறது. இறுதியில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும்ஏமாற்றப்படுகிறார்கள் என்பதே உண்மை. தெற்கில் உள்ள சிவில் சமூகத்தை சார்ந்த சிலர், தமது சுய விடயங்களிலேயே கண்ணும் கருத்துமாகவுள்ளனர். இதனால் இவர்கள்பாதிக்கப்பட்டவர்களின் வேதனைகளிற்கு முக்கியதுவம் கொடுப்பதில்லை.

 

சந்திரிக்க குமரதுங்காவின் ஆர்வம்

 

இன பிரச்சனைக்கு தீர்வு காணும் விடயத்தில் முன்னைய அரசு போல் அல்லாது, தற்போதைய அரசில் உள்ள சிலருக்கு அக்கறைகள் உள்ளது என்பது உண்மை. ஆனால் இவர்கள் முயற்சிகள்யாவும் தமிழ் மக்களின் உண்மையான அரசியல் அபிலாசைகளை திருப்திபடுத்துமா என்பது முக்கிய கேள்வியாகவுள்ளது.

உதாரணத்திற்கு முன்னாள் ஜனதிபதி ச்நதிரிக்காவின் அக்றை என்பது, இவரது மகள் ஓர் தமிழரை திருமணம் செய்து கொண்டதன் பலனாக உருவானதே. இவரது ஆட்சி காலத்தில், இனபிரச்சனைக்கான தீர்வு என்பது, தமிழீழ விடுதலை புலிகளை அழிப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டது என்பதே உண்மை.

 

சிறிலங்காவை பொறுத்தவரையில், ஐக்கிய தேசிய கட்சி, சிறிலங்கா சுதந்திர கட்சி ஆகிய இரு கட்சிகளே  ஆட்சியிலிருந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் இனப்பிரச்சனைக்கான தீர்விற்குமற்றைய கட்சியின் உதவி இல்லாது செய்ய முடியாது என கூறிவருகிறார்கள்.

 

ஆனால் உண்மை என்னவெனில், சுதந்திரத்தின் பின்னர், இவ்விரு கட்சிகளும் இரண்டு மூன்று தடவைகள் பாரளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டிருந்தனர்.அத்துடன் தமது கட்சியை சார்ந்தவரையே நிறைவேற்று அதிகரம் கொண்ட ஜனதிபதியாக கொண்டிருந்தவர்கள். அப்படியான வேளையில், இவர்கள் இனப்பிரச்சனையை தீர்பதற்கு என்னசெய்துள்ளார்கள் என்பதை யாவரும் ஆராய வேண்டும்.

 

ஆகையால் இவ்விரு கட்சிகளும் இணைந்த ஆட்சி என்பது, இன பிரச்சனை விடயத்தில் மிகவும் ஆபத்தான நிலையை அடைவதற்கான சாத்வீகங்களே மிகவும் கூடுதலாக காணப்படும்.

 

ஊதரணத்திற்கு தற்போதைய ஜனதிபதியையும், சிறிலங்கா சுதந்திர கட்சியை சார்ந்த சில அமைச்சர்கள் பற்றி ஆராய்வோமானால், இவர்கள் முன்னைய அரசின் பங்காளிகள். அவ் அரசுபாரளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பலத்தையும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனதிபதியையும் கொண்டிருந்தது. அவ்வேளையில், இவர்கள் இன பிரச்சனைக்கான தீர்வில் என்னமுயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்? ஓன்றுமே இல்லை என்பதே பதில்.

 

ஆகையால் தற்போதைய அரசு யாரை யார் மடையார்கள் ஆட்கிறார்கள் என்பதை தமிழ் மக்களும், சர்வதேசமும் புரிந்து கொள்ள வேண்டும்.

 

ஜனதிபதியையும் அமைச்சரவை பேச்சாளரை பொறுத்தவரையில் இவர்கள் ஒரு பொழுது ஜெனிவா பிரேரணையில் குறிப்பிட்டது போல் எந்த சர்வதேச நீதிபதிகளையோ, வழக்குதொடுனர்களையோ தாம் உள்ளடக்க போவதில்லையென கூறிவிட்டார்கள். ஆனால் இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ள .நா.மனித உரிமை சபையின் 31வது கூட்டத் தொடரில்சிறிலங்கா கலந்து கொள்ளவுள்ளது.

 

இவர்கள் தமிழர்கள் மீது நன்றாக சவரி செய்து பழகியதுடன், தமிழர்களிற்கு கொடுத்த வாக்குறுதிகளை ஏமாற்றியது போல், தற்பொழுது சர்வதேச சமூதாயத்திடம் ஆரம்பித்து விட்டார்கள்.இவர்களது முயற்சி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

எம்மை பொறுத்தவரையில், சிறிலங்காவில் பாதிக்கப்பட்ட மக்களிற்கு, தற்பொழுது சர்வதேச சமூதாயமே பொறுப்பு கூற வேண்டிய நிலைப்பாட்டில் உள்ளது. சிறிலங்காவின் பொய்வாக்குறுதிகளை இனிமேலும் ஏற்க முடியாத காரணத்தினால் தான், பாதிக்கப்பட்டோர் சர்வதேசத்தின் உதவியை நாடினார்கள்.

 

சிறிலங்கா மீது நிறைவேற்றப்பட்ட .நா. தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், சிறிலங்காவில் என்ன நடைபெறலாமென, முன்னாள் .நா.ஜெனிவா பிரதிநிதியான, கலாநிதி டயான்ஜெயதிலக்காவின் கூறிய  சுருக்கத்தை இங்கு தருகிறேன்.

 

1979ம் ஈரானில் நடந்தது போன்று அவசார காலநிலையோ, விமான தாங்கிகளோ, ஓட்டுக்குழுக்கள், விசேட  பிரிவினர் யாராலும், பெரும்பான்மையினர், மாத குருமார்களின் எழுச்சிகளைதாக்கு பிடிக்க முடியாத நிலை தான் ஏற்படும். 53ம் ஆண்டு ஏற்பட்ட கர்த்தால் போன்று இரத்த கழறியான நிலை தான் உருவாகலாம்;” (சுருகம்நன்றி)

 

சர்வதேச சமூதாயம் இவ் கருத்தை கவனத்தில் கொள்வார்களென நம்புகிறோம்.

ஏவற்றை கூறுவார்கள்?

 

எதிர்வரும் .நா.மனித உரிமை சபையின் 31வது கூட்டத் தொடரில், சிறிலங்கா பற்றிய விசேட நிகழ்ச்சிகள் ஒன்றும் இல்லாவிடிலும், ஆங்காங்கே சிறிலங்கா பற்றிய சில தகவல்கள் பதிவுகள்வெளிவரும் என்பதில் ஐயமில்லை.

 

இவ் கூட்டத் தொடரில், சிறிலங்கா சார்பாக இதனது வெளிநாட்டு அமைச்சரோ அல்லது அவரது பேச்சாளரோ அல்லது சிறிலங்காவின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா கலந்து கொள்ளலாம்.

 

இவர்கள் அங்கு பிராஸ்தாபிக்கவிருக்கும் விடயங்களை ஏற்கனவே, சிறிலங்காவிற்கு விஜயம் செய்த .நா.மனித உரிமை ஆணையாளர் கூறிவிட்டார். ஏன்றாலும் இவர்களை இவற்றைஇன்னும் ஒரு தடைவை ஜெனிவாவில் கூறியே தீருவார்கள்.

 

தமது நாட்டிற்கு .நா. மனித உரிமை ஆணையாளர், .நா. காணமல் போவோர் கண்காணிக்கும் பிரிவு போன்ற பல முக்கிய பிரதிநிதிகள் மிக அண்மை காலங்களில் விஜயம்செய்துள்ளதாகவும், ஜனதிபதி தன்னை கொலை செய்ய முயற்சித்தவரை மன்னித்துள்ளதாகவும், கடந்த சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதையும், பத்திரிகையாளர் பிரகீத்ஏக்னிலியகோடையின் காணமல் போதலில் சம்பந்தப்பட்டோர், கொலை செய்யப்பட்ட பாரளுமன்ற உறுப்பினர்களான ஜோசேப் பரராஜசிங்கம், ரவி ராஜ் ஆகியோரின் கொலைகளில்சம்பந்தப்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பல கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், பொது மக்களுடைய காணிகள் பல மீள கையளிக்கப்பட்டுள்ளதாகவும் நிட்சயம்கூறுவார்கள்.

 

ஏவற்றை கூற மாட்டார்கள்?

 

இவற்றை வெற்றிகரமாக மனித உரிமை சபையில் கூறவுள்ள சிறிலங்கா அரசு, கீழ் வரும் விடயங்களை நிட்சயமாக 31வது கூட்டத் தொடரில் கூற மாட்டார்கள்.

 

ஜனதிபதியை கொலை செய்ய முயற்சித்தவர் என்பவர் எப்பொழுது கைது செய்யப்பட்டார், எப்பொழுது அவரது வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது, அவ் வேளையில் எத்தனைவருடங்கள் தண்டனையாக அவருக்கு வழக்கப்பட்டது போன்ற விடயத்தை சபையில் கூற மாட்டார்கள்.

 

ஜனதிபதியின் கொலை முயற்சியில் ஈடுபட்டவர் என்பவர் 2006ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இவரது வழக்கு கடந்த வருடம் நீதி மன்றத்திற்கு எடுத்து கொள்ளப்பட்ட வேளையில், இவருக்குபத்து வருடம் சிறை தண்டனை தீர்க்கப்பட்டது. அப்படியானால் ஏற்கனவே பத்து வருடம் சிறையில் இருந்த ஒருவருக்கு ஏதற்காக ஜனதிபதியின் மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கேள்விசட்ட ரீதியாக எழுகிறது? இவ் விடயங்களை மனித உரிமை விடயங்களில் அடிப்படை அறிவு அற்ற எவராலும் புரிந்து கொள்ள முடியாது.

 

பொய் வழக்குகள் தாக்கல் செய்வதில் சிறிலங்கா நிபுணர்கள் என்பதை யாவரும் அறிவார்கள். ஜனதிபதியின் கொலை முயற்சியில் ஈடுபட்டவர் என்பவர் மீது வேறு பொய் வழக்குகள் தாக்கல்செய்யாது, அவரை விடுதலை செய்ததன் முக்கிய நோக்கம், சர்வதேசத்தில் தங்களை ஓர் நல்லாட்சியென நிருபித்து  லாபம் தேடுவதே. என்றோ ஒரு நாள,; ஜனதிபதி மீதான கொலைமுயற்சியின் உண்மை தன்மையை யாவரும் அறிந்தே தீருவோம்!

 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவினால் யாழ்பாணத்தில் தைப்பொங்கல் தினத்தன்று கூறப்பட்ட, “காணமல் போனோர் யாரும் உயிருடன் இல்லை என்ற கருத்தை இவர்கள் மனித உரிமைசபையில் கூறுவார்களா? நிட்சயம் இல்லை.

 

சிறிலங்காவிற்கு விஜயம் செய்துள்ள .நா.வின் காணமல் போனோரின் கண்காணிப்பு பிரிவினால் பிரஸ்தாபிக்பட்ட, திருகோணமலை கடற்படை முகாமில் உள்ள ரகசிய தடுப்பு முகாம்கள்பற்றி இவர்களால் மனித உரிமை சபையில் கூறமுடியுமா?

 

சிறிலங்கா அரசினால் மிக அண்மை நாட்களாக பிரஸ்தாபிக்கப்பட்டு வரும், சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட வியடம். இது ஓர் முழு பூசனிக்காயை சோற்றுக்குள்புதைத்த கதை.

 

சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட வியடம் எவ்விதத்திலும் ஓர் பாரீய விடயம் அல்லா. இலங்கையின் முதலாவது சுதந்திர தினமான 1949ம் ஆண்டு தமிழில் தேசிய கீதம்இசைக்கப்பட்டதற்கு பல ஆதரங்கள் உத்தியோகபூர்வமாக உள்ளனா. இதை சிங்கள அரசுகள் எந்தவித சட்ட மூலம் அற்று, ஏதேச்சையான முறையில் நிறுத்தினார்கள் என்பதே உண்மை.

 

அத்துடன், ஜனதிபதி சந்திரிக்கா குமாரதுங்காவின், தகப்பனார் 1956ம் அறிமுகப்படுத்தியசிங்களம் மட்டும் சட்டம் இதற்கு உறுதுணையானது என்பதே உண்மை. ஆகையால் சுதந்திர தினத்தில்தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதை, சரித்திரம் தெரிந்த எந்த தமிழனும் ஓர் புதுமையான விடயமாக கொண்டு கண்ணீர் வடிக்கமாட்டார் என்பதே உண்மை.

 

சிறிலங்காவில் ஜனதிபதி உட்பட, பல அமைச்சர்களும், ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீhமானத்திற்கு எதிரானவர்கள் என்பதை, இவர்களால் எதிர்வரும் .நா.மனித உரிமை சபையில்கூறமுடியுமா?

 

நாக்குண்டார் நாவிளர்ந்தார்.

 

உண்மை என்வெனில், சிங்கள சிப்பாய்களால்கைது, சித்திரவதை, பலியல் வன்முறை, படுகொலை, கடத்தப்பட்டு காணமல் போனோர் யாவரும் தமிழர்களே. இவ் அடிப்படையில்தமிழர்களை இன்னல்களுக்கு ஆக்கிய சிங்கள சிப்பாய்களை எதற்காக சிங்கள அரசுகள் ஆகிய நாம் விசாரித்து தண்டிக்க வேண்டும் என்பதே அவர்களது சிந்தனை. இக் கரணியினலேயே கடந்தஆறு தசாப்தங்களிற்கு மேலாக தமிழர்களிற்கு ஏற்பட்டுள்ள அரசியல் அநீதிகளிற்கு எந்த சிங்கள அரசும் நீதி காண முன் வரவில்லை, முன் வர போவதுமில்லை. இவ் யாதர்தமான உண்மையைசர்வதேச சமூதாயத்தினால் புரிய முடியமால் உள்ளது.

 

சர்வதேச ரீதியாக நாடுகளின் பிரதிநிதிகள் ஆகக் கூடியது ஐந்து வருடங்களே தமது பதவி கடமைகளை புரிகின்றனர். அதற்குள் ராஜதந்திரிகள், நிர்வாகிகளில் பதவி இட மாற்றம் ஏற்படுகிறது.அதன் பின்னர் புதிய முகங்கள் கடமைகளை பொறுப்பு எடுத்து மீண்டும் ஓர் நாட்டின் நிலைமைகளை ஆராய்கிறார்கள். இவ் வேளையில் சிறிலங்காவிலும் ஆட்சி மாற்றம், அமைச்சரவைமாற்றம், பாரளுமன்ற உறுப்பினார்கள் மாற்றம் ஏற்படும் பொழுது, சர்வதேசத்தை இவர்களால் மிகவும் இலகுவாக ஏமாற்றக் கூடியதாகவுள்ளது. சர்வதேசத்தில் சிவில் உத்தியோகத்தர்கள்இருந்துள்ள போதிலும் அவர்கள் முடிவு எடுக்கும் நிலையில் இல்லை என்பதே உண்மை. இப்படியாக காலம் கடந்து செல்கிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்துபாதிக்கப்பட்டவர்களாகவே காணப்படுகின்றனர்.

 

2009ம் ஆண்டின் பின்னர் புலம் பெயர் தேசத்தில் உதயமான ஓர் அமைப்பு, கடந்த காலங்களில் ஊடகங்களில் தமிழீழ விடுதலை போராட்டத்தை விற்று தமக்கு பெயரையும் புகழையும்தேடினார்கள். இவர்கள், ஜனதிபதி சிறிசேனவுடனும், சில அமைச்சர்களுடனும் விருந்தோம்பல் செய்த காரணத்தினால், தற்பொழுது வடக்கு கிழக்கில் உண்மைகள் யாதார்தங்களைகதைப்பதற்கு தயங்குகிறார்கள். இதை தான் சொல்வது, “நாக்குண்டார் நாவிளர்ந்தாரென. தற்பொழுது ஜனதிபதி சிறிசேனவிற்கும், சிறிலங்கா அரசிற்குமாக வக்காளத்து வாங்குகிறார்கள்.இதனால் இவர்களது செவ்விகள், கட்டுரைகள் கொழும்பில் அரச சார்பு ஊடகங்களில் வெளிவருகின்றனா. இவர்கள் வாழத் தெரிந்த மனிதர்களா?

 

புலிகளின் பிடியிலிருந்து மக்களை காப்பாற்றினார்களா?

 

யுத்தம் நடந்த வேளையிலும் யுத்தம் முடிவுற்றதும், பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சா, ஜனதிபதி ராஜபக்சா, அவர்களது அரசாங்கம் போன்றோர், தமிழ் மக்களை தாங்கள் தமிழீழவிடுதலை புலிகளின் பிடியிலிருந்து காப்பாற்றியதாக, சர்வதேசத்திற்கு அறிக்கைகளை வெளியிட்டு வெற்றியும் கண்டுள்ளனர்.

 

கடந்த ஆறு வருடங்களின் பின்னர், பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சாவினால் கடந்த 7ம் திகதி  கொழும்பில் ஓர் ஆங்கில ஊடகத்திற்கு கொடுத்த செவ்வியில், கீழ் வரும்உண்மைகளை கூறியுள்ளார்.

 

கேள்வி : மக்கள் ராஜபக்சாவை ஒதுக்கியுள்ளதுடன், இவரை படுதோல்வி அடையவும் பண்ணியுள்ளார்கள் என நீங்கள் எண்ணவில்லையா?

 

பதில் : மக்களுடைய எண்ணங்களை எப்படியாக மாற்றினார்கள் என்பதை அவதானிக்க வேண்டும். வடக்கு கிழக்கு மக்கள் ராஜபக்சாவிற்கு எதிராக வாக்களித்ததை ஆராயுமிடத்து, தமிழீழவிடுதலை புலிகளின் தோல்வி என்பது மக்களை மூளைசலவை செய்துள்ள பிராபாகரன் பக்கத்திற்கு சார்பாக இருந்துள்ளது. காரணம் பிரபாகரன் இவர்களின் கதாநாயகன்.

 

கேள்வி : அப்படியானால் எதற்காக தமிழ் மக்கள் ராஜபக்சா அரசில் கோபம் கொண்டுள்ளார்கள்?

 

பதில் : காரணம் நாங்கள் தமிழீழ விடுதலை புலிகளை இல்லாது ஒழித்துள்ளதுடன், பிரபாகரனும் இல்லை.

 

இவர்கள் எப்படியா சர்வதேச சமூதாயத்தை ஏமாற்றுகிறார்கள் என்பதற்கு இது ஓர் நல்லா ஊதரணம்.

 

உண்மையில் தெற்கில் உள்ள மக்கள் ராஜபக்சாவிற்கே தமது வாக்குகளை அளித்துள்ளனர். வடக்கு கிழக்கு வாழ்மக்களுடன், மலையாக தமிழர்களின் வாக்குகளேயே இன்று சிறிலங்காவில் ஓர்ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை, சர்வதேச சமூதாயம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகையால் இவ் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியது சர்வதேச சமூதாயத்தின்முக்கிய கடமையாகும். சர்வதேச சமூதாயம் துங்குவதை விட்டு விழித்தெழ வேண்டும்.

 

ச. வி. கிருபாகரன்

பாரிஸ், பிரான்ஸ்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*