யாழ்.- கொழும்பிற்கு கடுகதி ரயில்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

inter

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான கடுகதி ரயில் சேவையொன்றை ஆரம்பிப்பது தொடர்பில் ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

தற்போது யாழ். தேவி உள்ளிட்ட ஐந்து ரயில்கள் பாளை – கொழும்பு சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன. குறித்த ரயில் போக்குவரத்து சேவையை எதிர்வரும் 13ம் திகதி தொடக்கம் கொழும்பில் இருந்து யாழ். வரை நீடிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் வழக்கமான ரயில் சேவைக்கு மேலதிகமாக நாளாந்த கடுகதி ரயில் சேவையொன்றை ஆரம்பிப்பது தொடர்பில் தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

தற்போது சேவையில் ஈடுபடும் ரயில்கள் கொழும்பிலிருந்து யாழ். வருவதற்கு ஏழுமணிநேரம் தேவைப்படுகின்றது. கடுகதி சேவை மூலம் ஐந்து மணித்தியாலங்களில் யாழ்ப்பாணத்திற்கு வர முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை அவ்வாறு ஆரம்பிக்கப்படும் ரயிலுக்கும் யாழ்.தேவி கடுகதி சேவை என்றே பெயரிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit