யாழ். மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்கள் – வரைபடம் வெளியீடு

பிறப்பு : - இறப்பு :

யாழில் 52 சுற்றுலா மையங்கள் – வரைபடம் வெளியீடு 03.10.2014 � வெள்ளிக்கிழமையாழ். மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்கள் 52 அடையாளப்படுத்தப்பட்ட சுற்றுலா வரைபடம் வெளியிடப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற சுற்றுலா மையத்திற்கான வரைபட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.யாழ். மாவட்டத்தில் உள்ள புராதன சின்னங்கள் மற்றும் ஆலயங்கள் அமைந்துள்ள பிரதேசங்களில் முக்கியமான 52 சுற்றுலா மையங்கள் தெரிவு செய்யப்பட்டு அவற்றிற்கு சுற்றிலா பயணிகள் செல்லும் வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த சுற்றுலா மையத்திற்கான தகவல் நிலையம் விரைவில் யாழ். கைதடி பகுதியில் அமைக்கப்படவுள்ளதாகவும், அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit