ISIS இற்கு எதிரான சக்தி வாய்ந்த சமூக ஊடகப் புரட்சி ஒன்று டுவிட்டரில் தொடக்கம்!

பிறப்பு : - இறப்பு :

#NotInMyName என்ற பெயரில் டுவிட்டரில் மிக சக்தி வாய்ந்த சமூக ஊடகப் புரட்சி  ISIS போராளிகளுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தாம் பிடித்து வைத்திருந்த சர்வதேச பிணைக் கைதிகளை சிரச் சேதம் செய்து அவை தொடர்பான வீடியோக்களை யூ டியூப்பிலும் அமெரிக்கா உட்பட ஏனைய நாடுகளுக்கு டுவிட்டரின் # கணக்குகள் மூலம் தொடர்ந்து அச்சறுத்தலையும் ISIS விடுத்து வந்துள்ளது.

இதனையடுத்து இணையத் தளம் மூலமாகவே ISIS இயக்கத்தின் வன்முறையுடன் கூடிய கொள்கைகளுக்கு எதிராகப் போராடும் விதத்தில் உலகம் முழுதும் வசிக்கும் முஸ்லிம்கள் டுவிட்டரின் #NotInMyName என்ற ஊடகப் புரட்சி மூலம் தமது கருத்துக்களைப் பகிர்ந்து ISIS இன் நடவடிக்கைகளை விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். இதில் முக்கியமாக ISIS இயக்கம் தமது மதமான இஸ்லாமைப் பிரதிநிதித்துவப் படுத்தவில்லை என்பதில் ஒரே உறுதியான மனப் பான்மையை முஸ்லிம்கள் வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

#NotInMyName ஊடகப் புரட்சி செப்டம்பர் 10 ஆம் திகதி லண்டனை மையமாகக் கொண்ட ஆக்டிவ் சேஞ்ஜ் அறக்கட்டளை (Active Change foundation) இனால் தொடங்கப் பட்டிருந்தது. இந்த அறக்கட்டளையின் ஸ்தாபகரான ஹனிஃப் காதிர் Mirror ஊடகத்துக்குக் கருத்துத் தெரிவிக்கையில், ‘ISIS போராளிகள் உண்மையான முஸ்லிம்கள் அல்ல! அவர்கள் ஒருபோதும் இஸ்லாமின் உண்மையான போதனைகளான சமாதானம், இரக்கம் மற்றும் மன்னிப்பு ஆகியவற்றைப் பின்பற்றுவதில்லை.’ என்றிருந்தார். #NotInMyName சமூக ஊடகப் புரட்சி கடந்த 7 நாட்களில் 14 000 இற்கும் அதிகமான டுவீட்டுக்களைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit