ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளில் திருப்தியில்லை; மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளில் திருப்தி கொள்ள முடியாது என்று மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் கவலை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக, ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளில் சாட்சியமளிப்பவர்களுக்கான மொழிபெயர்ப்பின் தரம் மிகவும் மோசமாக இருந்ததாகவும், சாட்சிகளுக்கு அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கான பாதுகாப்பு கேள்விக்கிடமாக இருப்பதாகவும், விசாரணையில் கேட்கப்படும் கேள்விகள் சில பதில்களை நிர்ணயித்து விட்டு அதனை பெறும் நோக்கில் கேட்கப்படுவது போல இருப்பதாகவும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவை, விசாரணைகளில் பெரும் தாக்கம் செலுத்தும் என்று மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து பி.பி.சி.யிடம் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, முழங்காவில் மற்றும் பூநகரி ஆகிய இடங்களில் நடைபெற்ற விசாரணைகளின் போது மொழிபெயர்ப்பில் இடம்பெற்ற பல தவறுகளை மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

சாட்சிகளுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்படாமை குறித்து கவலை வெளியிட்டுள்ள அந்த அமைப்பு, ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை நடைபெறும் இடங்களில் பெருமளவு இராணுவத்தினர் காணப்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

அத்தோடு, விசாரணை நடைபெறும் இடங்களில் சாட்சியமளிக்க வருபவர்கள் புலனாய்வுப் பிரிவினர் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவர்களால் புகைப்படம் பிடிக்கப்பட்டதாகவும் அது கூறுகிறது. இப்படியாக படம் பிடிக்கப்படும் யுக்தி மூலம் சாட்சிகள் பயமுறுத்தப்படுவதாக அந்த அமைப்பு சந்தேகம் வெளியிட்டுள்ளது.

அதேவேளை, சில சந்தர்ப்பங்களில் சாட்சிகளிடம் கேட்கப்படும் கேள்விகள், ஆணைக்குழுவினர் ஏற்கனவே நிர்ணயித்த ஒரு பதிலை கூறும் வகையில் சாட்சிகளை இட்டுச் செல்ல முயற்சிப்பதை உணரக் கூடியதாக இருப்பதாகவும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது.

இந்தக் கவலைகளை திறந்த விசாரணைகளின் போது தாம் அவதானித்த விடயங்களில் அடிப்படையிலேயே தாம் எழுப்புவதாகவும், இந்த விடயங்கள் குறித்து தாம் ஆணைக்குழுவின் கவனத்துக்கு கொண்டுவந்ததாக கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து குறிப்பிட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*