இராணுவம் இருப்பதையே வன்னி மக்கள் விரும்புவர் கிளிநொச்சி தளபதி தெரிவிப்பு!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

arm

வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டுமா என்பது குறித்து வாக்கெடுப்பு இடம்பெற்றால் இராணுவம் அங்கு நிலை கொண்டிருக்க வேண்டும் என்பதற்கு ஆதரவாகவே வன்னி மக்கள் வாக்களிப்பார்கள்.

ஏனெனில் இராணுவம் குற்றமற்ற சமாதானமான சமூகத்தை உறுதிசெய்துள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார் கிளிநொச்சி மாவட்ட பாதுகாப்பு படையினரின் தளபதி மேஜர் ஜெனரல் சுசந்த ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
பாதுகாப்பு படையினர் விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்குவதை தடுப்பதற்காக வேவு பார்க்கவேண்டியது அவசியம். நாங்கள் பொது மக்களின் நிகழ்வுகளில் குறுக்கீடு செய்வதில்லை

. எவராவது பயங்கரவாத நடவடிக்கைகளை, அரச விரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கிறார்களா என்றே கண்காணிக்கிறோம். இராணுவத்தால் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் எந்தவித பாதூரமான நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் அளிக்க முற்பட்ட வேளை கொல்லப்பட்ட அப்பன், கோபி போன்றவர்கள் புனர் வாழ்வு அளிக்கப்படாதவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit