வான் ஆற்றுக்குள் பாய்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கண்டி – மாத்தளை பிரதான வீதியில் கட்டுகஸ்தோட்டையை அண்மித்த பிரதேசத்தில் இன்று அதிகாலை வான் ஒன்று ஆற்றுக்குள் பாய்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

இவ் விபத்தில் மாவனெல்லை உயன்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமட் யூசுப், மொஹமட் பாரூக், பாத்திமா மிசிரியா என ஆகியோரே உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு, ஓட்டமாவடி பிரதேசத்திலுள்ள உறவினர் வீடு ஒன்றிக்கு சென்று வீடு திரும்பும் வழியில் அதிகாலை 4 மணியளவில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதி நித்திரைக்குள்ளாகி இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

உயிரிழநதவர்களின் சடலங்கள் தற்போது கட்டுகஸ்தோட்டை வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
10632797_810722535646784_6459695716534587883_n

10646763_810722455646792_3241984333914955028_n

van_accedent_kaddu_001

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*