கிளிநொச்சி மாவட்டத்தின் குடிநீர் விநியோகம் தொடர்பில் ஆராய்வு.

பிறப்பு : - இறப்பு :

கிளிநொச்சி மாவட்டத்தின் குடிநீர் விநியோகம் தொடர்பில் அமைச்சர்களான தினேஸ் குணவர்த்தன டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு 03.10.2014 – வெள்ளிக்கிழமைநீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் குடிநீர் விநியோகம் தொடர்பில்; அமைச்சர் தினேஸ் குணவர்த்தன மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரின் வாசஸ்தலத்தில் இச் சந்திப்பு இன்றையதினம் (03) இடம்பெற்றுள்ளது.இதன்போது கிளிநொச்சி மாவட்டத்தின் நகரை அண்டிய வாழும் மக்களும் மாவட்டத்தின் வௌ;வேறு பகுதிகளில் வாழும் மக்களும் வரட்சியான காலங்களில் குடிநீரை பெற்றுக் கொள்வதில் பல்வேறு பட்ட இடர்பாடுகளை எதிர்நோக்கி வருகின்றனர்.இந்நிலையில் இம் மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பல்வேறுபட்ட செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.இதன்பிரகாரம் கிளிநொச்சிக்கு வருகை தந்த அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, கிளிநொச்சி நகரம், பரந்தன், வட்டக்கச்சி, அக்கராயன, பூநகரி ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் நேரில் ஆராயவுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit