தமிழா்களுக்குத் தேவை கல்வியா? செல்வமா? வீரமா? புத்தியா? – பகுதி 1

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கல்வி, பொருள், வீரம் என்ற மூன்று செல்வங்கள் மனிதா்களுடைய வாழ்க்கையில் முக்கிய இடத்தை வகிக்கின்றது என்பது உண்மை. இந்த மூன்று செல்வங்களையும் பெறுவதற்காக இந்துக்கள் போற்றி வழிபடும் தினங்களே நவராத்திரியாகும்.

ஆனால் இந்த மூன்று செல்வங்களும் ஒரு சேர யாரிடத்தில் இருந்தாலும் அதனை தொடா்ந்து தக்க வைப்பதற்கோ அல்லது இவை எல்லாவற்றையும் பெறுவதற்கோ தற்போதய யுகத்தில் மனிதா்களுக்கு மிக முக்கியமான இன்னொரு செல்வம் இருக்க வேண்டும். அதுவே புத்திசாலித்தனம் எனும் செல்வமாகும்.

அறிவாளிக்கும் புத்திசாலிக்கும் இடையில் ஏராளமான வித்தியாசங்கள் இருக்கின்றன. கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு என ஓளவையார் சொன்னதாக பலரும் சொல்கின்றார்கள். ஆனால் என்னதான் உலக அளவானதைக் கற்றாலும் அந்த நபருக்கு புத்திசாலித்தனம் இல்லாது விடின் அவா் கற்றவை எல்லாம் வீணாகிவிடும்.

 

இங்கு ஒரு சிறிய நகைச்சுவையான கற்பனைக் கதை தரப்படுகின்றது.

அவுஸ்ரேலியாவுக்கு இலங்கையில் இருந்து தனிப்படகில் சென்ற ஒரு தன்மானத் தமிழன் ( இதன் அா்த்தம் என்னவெனின், தமிழைத் தவிர எந்த ஒரு மொழியும் தெரியாது என்பதுதான்) சுப்பிரமணியம் பெரும் துன்பப்பட்டு அவுஸ்ரேலியாவின் கரையை அடைந்துவிட்டான். அங்கு நின்ற பொலிசார் அவனை தமது மொழியில் நீ யார் ?எனக் கேட்கின்றார்கள் .

சுப்பிரமணியத்திற்கு தமிழைத்தவிர எதுவும் தெரியாததால் அவனும் பேந்தப் பேந்த முழித்துக் கொண்டு இருந்துள்ளான். இதனால் அவுஸ்ரேலியப் பொலிசார் 300 மொழிகள் தெரிந்த ஒரு அறிவாளியை கொண்டு வந்து அவன் முன் நிறுத்தினா். அவனும் எத்தனையோ மொழிகளில் சுப்பிரமணியத்தை நீ யார் எனக் கேட்கவும் சுப்பிரமணியம் பே..பே.. என நின்றதால் அந்த மொழிபெயா்பாளனுக்கு தா்மசங்கடமாகப் போய் தனக்குத் தெரியாத ஏதோ ஒரு மொழிக்காரன் இவன் என என நினைத்து விட்டு அவுஸ்ரேலியப் பொலிசாருக்கு சுப்பிரமணியம் ஊமை என பொய் சொல்லி விட்டுச் சென்றுவிட்டான்.

சுப்பிரமணியத்திற்கு மொழி தெரியாதே தவிர நல்ல புத்திசாலி. தன்னிடம் கேள்வி கேட்டவன் தன்னை ஊமை என்று பொலிசாருக்கு சொல்லிவிட்டான் என அறிந்த பின் தான் ஊமை அல்ல என பொலிசாருக்கு காட்டுவதற்காக அங்கு நின்ற ஒவ்வொரு பொருட்களாக தொட்டு தமிழில் சொல்லத் தொடங்கினான். அப்போது அங்கு ஒரு கங்காரு சென்றது. அதைப் பார்த்த அவன் அதனை கங்காரு என சொன்ன போது பொலிசார் உடனே அவன் ஊமையில்லை என்பதையும் அவன் ஒரு வித்தியாசமான மொழி பேசுகின்றவன் என்பதையும் அறிந்தார்களாம்.

கடைசியாகக் கிடைத்த தகவலின் படி அவுஸ்ரேலியாவுக்கு யாராவது படகில் இருந்து கள்ளமாக வந்தால் அவா்களைப் பிடிக்கும் அவுஸ்ரேலியா பொலிஸ் 300 மொழி தெரிந்த அந்த அறிவாளியுடன் இந்த சுப்பிரமணியத்தையும் கொண்டு வந்து கேள்வி கேட்க விடுவார்களாம். இது தொடா்பாக அந்த அறிவாளி கடும் கோபத்தில் சுப்பிரமணியைப் பார்த்து நான் ஊமை என்று சொன்ன நீ எப்படி அவுஸ்ரேலியாப் பொலிசாருடன் சோ்ந்தாய் என அவுஸ்ரேலிய மொழியில் கேட்ட போது எங்கட சுப்பிரமணியம் ”உனக்கு 300 மொழி தெரிந்தும் பிரயோசனமில்லாது போய்விட்டது. ஆனால் எனக்கு முன்னேறும் மொழி தெரிந்ததால் இப்போது இப்புடி இருக்கிறன்” என சொல்லிவிட்டுப் போய்விட்டானாம். இப்போது சுப்பிரமணியமும் ஒரு மொழி பெயா்பாளராக இருந்து அவுஸ்ரேலியாவுக்கு கள்ளப்படகில் போகும் தன்மானத் தமிழா்களை விசாரிக்கும் அதிகாரியாக இருப்பதாகக் கேள்வி.இது செவி வழியாக வந்த ஒரு கதை.

அறிவாளியாக இருக்கும் ஒருவா் புத்திசாலியாக இருக்கும் ஒருவரை தனக்குக் கீழே வைத்திருந்து வேலை செய்விப்பது என்பது மிகவும் கஸ்டமான விடயமாக இருக்கும். ஆனால் ஒரு புத்திசாலி தனக்கு கீழே ஏராளமான அறிவாளிகளை வைத்து வேலை செய்விக்க முடியும்.

தன்னிலும் விடப் பலமான ஒரு எதிரியை ஒரு புத்திசாலி நேரடியாக எதிர்த்துப் போராடமாட்டான். இது இராமாயணத்திலும் தெரிவிக்கப்பட்ட ஒன்று. வாலியை இராமன் மறைந்திருந்தே தாக்கிக் கொன்றான். தனது எதிரியுடன் தான் சண்டையிடாது அந்த எதிரிக்கு இன்னொரு பலமான எதிரியை உருவாக்கி அவா்களிடையே சண்டையை மூட்டிவிட்டு இருப்பவனே புத்திசாலித்தனமானவன்.

இவற்றுக்கான ஏராளமான விளக்கங்கள் பஞ்சதந்திரக் கதைகளில் இருக்கின்றது.

அரசியலில் இந்தப் புத்திசாலித்தனத்திற்கு இராஜதந்திரம் எனப் பெயா் சூட்டப்பட்டுள்ளது.

இன்றைய உலக அரங்கில் அரசியல், சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம், இனம், மொழி, மதம் ஆகிய பின்னணிகளைக் கொண்டு நாடுகளாக பிரிக்கப்பட்டு வாழும் மக்கள் கூட்டத்தினுள் தமிழா்கள் என்ற ஒரு இனம் தான் வாழும் இடங்களில் எல்லாம் பெரும் துன்பப்பட்டுக் கொண்டு இருப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது அவா்களிடத்தில் புத்திசாலித்தனமான செயற்பாடுகள் இல்லாத நிலையே ஆகும்.

உலகெங்கும் வாழும் தமிழா்களின் தொகை பத்துக் கோடிக்கு மேல் போய்விட்டதாகத் தெரியவருகின்றது. உலக சனத் தொகையில் இரண்டாம் இடத்தில் உள்ள தெற்காசிய நாடான இந்தியாவில் சுமார் 9 கோடிக்கு மேல் தமிழா்கள் இருக்கின்றார்கள். அதுவும் தமிழ்நாடு மாநிலத்தில் மட்டும் 8 கோடிக்கு மேல் தமிழா்கள் இருக்கின்றார்கள். ஆனால் அந்த தமிழ் நாட்டுத் தமிழா்கள் தமது அரசியல்பலத்திற்காக தோ்ந்தெடுத்திருந்த தலைவா் (தலைவி) தற்போது ஊழல் குற்றச்சாட்டில் ஜெயில்ல இருக்கின்றார்.

இவ்வாறான ஒரு நிலையில் தமிழா்களின் தலைவிதி உலக அரங்கில் நிர்னயிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் வெளிச்சக்திகளா? 8 கோடிகளுக்கு மேல் உள்ள தமிழா்களால் ,இவ்வாறான ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ள ஒருவரைத் தோ்ந்தெடுக்கச் செய்ததும் வெளிச் சக்திகளா?

தொடரும்………

த.வசந்தரூபன்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*