“செக்சின்” போது ரத்தம் வந்தால்தான் கன்னியா.!?? (கண்டிப்பாய் இது வயது வந்த வர்களுக்கு மட்டுமே!)

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

054564646413136346

!இங்கு பிரசுரிக்கப்படும் செய்திகள் பாலியல் தொடர்பான சந்தேகங்களை தீர்க்கும் முகமாகவே அன்றி கலாச்சாரச் சீர்கேட்டிற்கோ அல்லது தவறான வழிகாட்டலுக்கானதோ அல்ல என்பதனையும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கானது என்பதனையும் கதிரவன் விரிவாக்கற் பிரிவினால் பரிந்துரை செய்யப்படுகின்றது. நன்றி!

 

ஒரு பெண் முதன் முதலில் உடலுறவில் ஈடுபடும்போது இரத்தப் சிறிதளவு அவளின் பிறப்புறுப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறுவது சாதாரணமான ஒரு விடயம். இதையே ஒரு பெண்ணின் கற்பினை நிரூபிக்கும் வழியாகவும் நம் சமூகம் பயன்படுத்துகிறது.
நம்மிடையே இருக்கும் அறியாமையின் வெளிப்பாடுகளில் ஒன்றே இந்த ரத்தப் போக்கினை வைத்து ஒரு பெண்ணின் கற்பினை எடை போட நினைப்பது. எப்படி பத்தினி ஆனாலும் எல்லாப் பெண்களுக்கும் முதன் முறையான உடலுறவின் போது ரத்தம் வருவதில்லை.
முதலில் எவ்வாறு இந்த இரத்த வெளியேற்றம் நடைபெறுகிறது என்று பார்ப்போம்.

 

பெண் உறுப்பை எடுத்துக் கொண்டோமானால் தனித்தனியாக இரு துவாரங்கள் இருக்கும். ஒன்று சிறு நீர் துவாரம்( urethral opening). மற்றது மாதவிடாய் வெளியேற்றம் நடைபெறும் மற்றும் உடலுறவில் ஈடுபடும் துவாரம்vaginal opening).
இரண்டாவதாக உள்ள மாதவிடாய் வெளியேறும் அல்லது உடலுறவில் ஈடுபடும் துவாரம் ஹைமன் (hymen)எனப்படும் ஒரு மென்சவ்வினால் சூழப் பட்டிருக்கும். அந்த மென்சவ்வின் நடுவிலே ஒரு சிறிய துளை இருக்கும் அந்த துளையின் ஊடாகவே அந்த பெண்ணுக்கு மாதவிடாய் வெளியேற்றம் நடைபெறும்.
முதன் முதலில் உடலுறவில் ஈடு படும் போது இந்த மென்சவ்வு கிழிவடைவதனால் ரத்தப் போக்கு ஏற்படும். ஆனாலும் இது எல்லாப் பெண்களிலும் சாத்தியமில்லை.

 

சில பெண்களுக்கு இந்த ஹைமன் இயற்கையாகவே இல்லாமல் இருக்கலாம்

சில பெண்களுக்கு இந்த ஹைமன் உடலுறவு அல்லாத வேறு காரணங்களால் உடைந்து போகலாம்.அதாவது சைக்கிள் ஓட்டம், பாரத நாட்டியம் , ஸ்கிப்பிங் ,போன்ற செயற்பாடுகளின் போது கூட இந்த கைமண் பாதிக்கப் படலாம்.
சுய இன்ப செயற்பாட்டில் ஈடு படும் பெண்களிலும் இந்த ஹைமன் உடைந்து விடலாம்.

சில பெண்களிலே இந்த ஹைமன் இளாஸ்டிக் (elastic) தன்மையானதாக இருக்கும் இவர்கள் எத்தனை முறை உடலுறவில் ஈடுபட்டாலும் அவர்களின் கைமண் அப்படியே பாதிக்கப் படாமல் இருக்கலாம்.

ஆகவே ஹைமன் மென்சவ்வு உள்ளதை வைத்தோ அல்லது ரத்தப் போக்கினை வைத்தோ மட்டும் வைத்து ஒரு பெண்ணின் கன்னித்தன்மையை நிரூபித்து விட முடியாது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit