ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் சம்பூருக்கு விஜயம் செய்யாதது ஏன்? (PHOTOS)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் சையிட் அல் ஹுசேன் இலங்கையின் வடகிழக்கு மாகாணங்களில் பல இடங்களுக்கு விஜயம் மேற்கொண்டு பலதரப்பட்டவர்களுடன் பேசியுள்ளார். அவர் வடமாகாணத்தில் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் வாழ்விடங்களுக்கும் விஜயம் செய்ததோடு ஆறதல் வார்த்தைகளையும் கூறியுள்ளார்.

கிழக்கு மாகாணத்திற்கு வியஜம் செய்த சையிட் அல் ஹுசேன் விசேடமாக இன்றுவரை சொந்த இடங்களுக்கு அனுமதிக்கப்படாமல் நான்கு நலன்புரி முகாம்களில் வாழும் சம்பூர் மக்கள் தங்கியுள்ள பிரதேசத்திற்கோ அன்றி சம்பூருக்கோ விஜயம் செய்யாதது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. யுத்தத்தின் போது அதன் பின்னரும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் உலகம் முழுவதும் பேசப்பட்டதுமான கிராமமாக சம்பூர் உள்ளது.

இங்கு விடுவிக்கப்பட்ட 818 எக்கர் நிலம் தவிர்ந்த அனைத்துப் பிரதேசங்களும் இன்னமும் கடற்படையினரின் வசமே உள்ளன. இதைவிட இந்திய அனல் மின்நிலையமும் இங்குதான் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்காக மக்களை தினம், தினம் வேறு இடங்களுக்கு அரச அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் துரத்தியவண்ணம் உள்ளனர்.

மேலாக அனல் மின் நிலையத்திற்கு எதிராக மனித உரிமைகள் ஆணையத்தில் முறைப்பாடும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் சையிட் அல் ஹுசேன் சம்பூர் பக்கமே திரும்பிப் பார்க்கவில்லை என மக்கள் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளனர். கிழக்கு மாகாண அமைச்சின் உறுப்பினர்களும், அதிகாரிகளும் அந்தப்பகுதிக்கு சையிட் அல் ஹுசேயினை அழைத்துத் செல்லாதது ஏன் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.

2005ஆம் ஆண்டு வாழ்விடங்களை இழந்த மக்கள் பல்வேறு விதமான இழப்புகளோடு வாழ்வாதாரத்திற்கே வழியில்லாமல் அகதி முகாம்களில் அடைபட்டு சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இவர்களுக்கு பல்வேறுவிதமான நெருக்கடிகள் உள்ளன. மீள்குடியேறாமை ஒருபுறம், வாழ்வாதாரம் மறுபுறம், அச்சுறுத்தும் அனல்மின் நிலையமும், அங்கு நிலைகொண்டுள்ள கடற்படையின் பாரிய முகாமும் இன்னொருபுறம், அண்மையில் நடைபெற்ற பாடசாலைச் சிறுவனின் படுகொலை, கல்விக்கான வாய்ப்பு இங்கு குழந்தைகளுக்கு மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து வசதிகள் துளியளவும் சீரில்லை.

இவையெல்லாம் ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் சையிட் அல் ஹுசேன் என்பார்வையிட அனுமதிக்கவில்லை என்பது பலத்த சந்தேகங்களை எற்படுத்தி நிற்கின்றது.

ilangai tamil news news tamil srilanka srilanka news tamil srilanka news tamil news

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*