மன்னாரில் புதிய அரசியலமைப்பு தொடர்பாக மக்களின் கருத்தறியும் நிகழ்வு ஆரம்பம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்திற்காக நாடாளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் கருத்தறியும் விசேட அமர்வுகள் இன்று புதன் கிழமை மன்னாரில் ஆரம்பமாகியுள்ளது.மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெய்க்கா மண்டபத்தில் குறித்த விசேட அமர்வு இடமபெற்று வருகின்றது.

புதிய அரசாங்கம் தற்போது புதிய அரசியலமைப்பு ஒன்றினை கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், அதுபற்றி மக்களின் கருத்துக்களை அறியும் குழு நியமிக்கப்பட்டு மாவட்ட மட்டத்தில் கருத்துக்கள் பெறப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக வவுனியா மாவட்ட செயலகத்தில் மக்கள் கருத்தறியும் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.குறித்த குழுவைச் சேர்ந்த எஸ்.தவராசா, லால் விஜயநாயக்க மற்றும் எஸ்.விஜசங்கர் ஆகியோர் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து மக்கள் கருத்துக்களை பெற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.இதன் போது மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் இன,மத வேறுபாடுகள் இன்றி கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கி வருகின்றனர்.

மக்கள் கருத்தறியும் நிகழ்வு நாளை வியாழக்கிழமையும் மன்னார் மாவட்ட செயலக ஜெய்க்கா மண்டபத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*