அமெரிக்காவில் சலூனில் வேலை பார்த்தவர் ஒரே நாளில் கோடீஸ்வரரான அதிசயம்.

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

069bab34de21b670d1ca23023bf4e93d

அமெரிக்காவில் சலூனில் வேலை பார்த்த சாதாரண கூலித்தொழிலாளி ஒருவர் லாட்டரி சீட்டு விழுந்ததால் ஒரே நாளில் மில்லியனாராக மாறிய அதிசயம் நடந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சலூனில் நகங்களை அழகுபடுத்தும்

கூலித்தொழிலாளியாக பணிபுரிந்த Vinh Nguyen என்பவர் $10 கொடுத்து வாங்கிய ஜாக்பாட் லாட்டரி சீட்டு ஒன்றுக்கு $228.4 மில்லியன் பரிசு கிடைத்துள்ளது. இதன்மூலம் நேற்று வரை கூலித்தொழிலாளியாக இருந்த அவர், இன்று பெரும் மில்லியனராக மாறியுள்ளார்.

கடந்த புதன்கிழமை இரவு நடந்த குலுக்கல் ஒன்றில் Vinh Nguyen வாங்கிய சீட்டுக்கு பரிசு விழுந்ததை அறிந்தும், அவர் எந்தவித பதட்டமும் இன்றி சாதாரணமாக மறுநாள் காலையில் California Lottery’s Hayward District office அலுவலகம் சென்று முதல் பரிசு பெற்ற அதிர்ஷ்ட நபர் தான் என்பதை கூறியுள்ளார். அங்குள்ள அதிகாரிகள் அவரை பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.

லாட்டரி சீட்டின் முடிவை பார்த்ததும் எனக்கு பரிசு விழுந்துள்ளது என்பதை முதலில் நான் நம்பவே இல்லை. தான் ஒவ்வொரு வாரமும் $30 பணத்தை லாட்டரி சீட்டு வாங்குவதற்காக ஒதுக்கியதாகவும் ஆனால் இவ்வளவு பெரிய தொகை பரிசாக கிடைக்கும் என கனவிலும் தான் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit