வாள் வெட்டுச் சம்பவத்துடன் தொடா்புடைய கும்பல் கைது.

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

கைதடி சந்தியில் கடந்த செப்டெம்பர் மாதம் 29ஆம் திகதி இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 8 பேர் வியாழக்கிழமை (02) கைது செய்யப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

கைதடியிலுள்ள வாசிகசாலை ஒன்றின் முன்னால் நின்றிருந்த நால்வர் மீது, மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் ஒன்று வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டிருந்தது.

இதில் சிறுகாயங்களுக்குள்ளாகிய நால்வரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள்.

இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு, சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருவர், யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூவர் மற்றும் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூவர் என எண்மர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களை கைது செய்வதற்கு அந்தந்த பொலிஸ் நிலையங்களின் பொலிஸாரும் உதவி புரிந்ததாகவும் எட்டு சந்தேகநபர்களையும் வெள்ளிக்கிழமை (03) சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவா்களில் நான்கு போ் நேற்றிரவு 9 மணியளவில் வாள்களுடன் சுன்னாகம் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவா்களை வைத்து மேற்கொண்ட விசாரணைகளின் போதே இவா்கள் ”நவம் குறுாப்” எனும் காவாலிக் கூட்டத்தைச் சோ்ந்தவா்கள் எனத் தெரியவருகின்றது

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit